தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாடு, உலக நாடுகளில் இந்தியாவின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், புதிய அடையாளத்தை பெறவும் ஒரு மாபெரும் தருணம்: பிரதமர்

Posted On: 28 JAN 2025 5:35PM by PIB Chennai

எதிர்வரும் வேவ்ஸ் (உலக ஒலி, ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாடு) இந்தியாவின் படைப்பாற்றலுக்கு ஒரு புதிய உலகளாவிய அடையாளத்தை அளிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். புவனேஸ்வரில் வளமையான ஒடிசா –ஒடிசாவில் தயாரிப்போம் மாநாட்டில் உரையாற்றிய அவர், வேவ்ஸ் போன்ற முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டுவது மட்டுமல்லாமல், உணர்திறன்களை உருவாக்கி பொருளாதாரத்தை எவ்வாறு ஊக்குவிக்கும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார். இந்தியாவின் பரந்த படைப்பாற்றல் திறனைப் பயன்படுத்துவதற்கும், ஊடகம், பொழுதுபோக்கு துறையில் உலகளாவிய தலைமைத்துவமாக நாட்டை நிலைநிறுத்துவதற்கும் இதுபோன்ற முயற்சிகளின் மகத்தான திறனை அவர் சுட்டிக் காட்டினார்.

வேவ்ஸ் 2025: இந்தியாவின் பழங்கால மரபுகளை சமகாலப் படைப்பாற்றலுடன் இணைப்பது

வேவ்ஸ் 2025 இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் நவீன படைப்பாற்றலின் தனித்துவமான சங்கமத்தை வழங்குகிறது. பாரம்பரிய மற்றும் மெல்லிசை படைப்பாளிகள் முதல் புதுமையான விளம்பர வல்லுநர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் வரை அனைவருக்கும் தளங்களை வழங்குகிறது.

பார்வையாளர்களிடையே பாரம்பரிய மற்றும் மெல்லிசை திறமையை கண்டறியும் வகையில், வா உஸ்தாத் விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இளம், பாரம்பரிய பயிற்சி பெற்ற பாடகர்களுக்கு ஒரு தளமாக செயல்படும். இதில் இந்துஸ்தானி அல்லது கர்நாடக இசை, சூஃபி பாடல் மற்றும் மெல்லிசை வகைகளில் ஆர்வமுள்ள திறமையான நபர்கள் பங்கேற்கலாம்.

இதற்கான பதிவு  தில்லி தர்பார் இணையதளம் மூலம் தொடங்கியுள்ளது. இதற்கான இறுதிப்போட்டி மும்பையில் வேவ்ஸ் 2025  நிகழ்ச்சியில் நடைபெறும். தூர்தர்ஷனில் 26 அத்தியாயங்கள் ஒளிபரப்பப்படுவதன் மூலம், வா உஸ்தாத் நிகழ்ச்சி இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும். அதே நேரத்தில் அடுத்த தலைமுறை இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும். பாரம்பரிய நிபுணத்துவத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம், இந்த திட்டம் பாரம்பரிய இசையின் ஆத்மார்த்தமான அழகையும் இன்றைய உலகில் அதன் பொருத்தத்தையும் முன்னிலைப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097072

***

TS/IR/RS/DL


(Release ID: 2097119) Visitor Counter : 21