பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

Posted On: 23 JAN 2025 4:26PM by PIB Chennai

பிரதமர்: 2047-க்குள் அடைய வேண்டிய நாட்டின் இலக்கு என்ன?
மாணவன்: நாம் நமது நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதாகும்.
பிரதமர்: கண்டிப்பாகச் சொல்றீங்களா?
மாணவன்: ஆமாம் சார்.
பிரதமர் : 2047 என ஏன் முடிவு செய்யப்பட்டது?
மாணவன்: அதற்குள் நம் தலைமுறை தயாராகி விடும்.
பிரதமர் : அது மட்டுமா?
மாணவன்: நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆகும்.
பிரதமர்: நல்லது!
பிரதமர் : நீங்கள் வழக்கமாக எத்தனை மணிக்கு வீட்டை விட்டு வெளியேறுவீர்கள்?
மாணவர் : 7:00.
பிரதமர் : அப்படியானால் மதிய உணவை உங்களுடன் எடுத்துச் செல்கிறீர்களா?
மாணவன்: இல்லை சார், 
பிரதமர் : நான் சாப்பிட்டு விட மாட்டேன். சும்மா சொல்லுங்க.
மாணவன் : நான் ரொம்ப கஷ்டப்பட்டு இங்க வந்திருக்கேன்.
பிரதமர் :  சாப்பிட்டு விட்டு வந்தாயா அல்லது சாப்பாடு கொண்டு வரவில்லையா? 
மாணவன்: இல்லை சார்.
பிரதமர்: சரி, இன்று என்ன நாள்?
மாணவர்: ஐயா, இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள்.
பிரதமர்: ஆம்.
பிரதமர் : அவர் எங்கு பிறந்தார்?
மாணவன் : ஒடிசா
பிரதமர்: ஒடிசாவில் எங்கே?
மாணவர் : கட்டாக்.
பிரதமர்: அப்படியானால் இன்று கட்டாக்கில் ஒரு பெரிய விழா நடக்கிறது.
பிரதமர் : உங்களை ஊக்குவிக்கும் நேதாஜியின் முழக்கம் என்ன?
மாணவன் : ‘ரத்தம் கொடுங்கள். நான் சுதந்திரம் பெற்றுத் தருகிறேன்’ என்பதாகும்.
பிரதமர் : பாருங்கள், நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது, இப்போது நாம் ரத்தம் கொடுக்க விரும்பவில்லை என்றால், நாம் என்ன கொடுப்போம்?
மாணவன்: ஐயா, அவர் எத்தகைய தலைவராக இருந்தார் என்பதையும், அவர் தன்னை விட தனது நாட்டிற்கு எவ்வாறு முன்னுரிமை அளித்தார் என்பதையும் இது காட்டுகிறது. எனவே இது எங்களுக்கு நிறைய உத்வேகம் அளிக்கிறது.
பிரதமர்: நமக்கு உத்வேகம் கிடைக்கிறது. சரி, வளர்ச்சி தொடர்பான  உங்களது கருத்துகள் என்ன?
மாணவர் : ஐயா, எங்கள் நிலையான வளர்ச்சி இலக்குகள் தொடர்பான பாடத்திட்டத்தின் மூலம், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க விரும்புகிறோம்.
பிரதமர்: சரி, இந்தியாவில் என்ன நடக்கிறது... கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க என்ன செய்யப்படுகிறது?
மாணவன் : சார், மின்சார வாகனங்கள் வந்துவிட்டன.
பிரதமர் : மின்சார வாகனங்கள், நல்லது! பிறகு..
மாணவன் : சார், பேருந்துகளும் இப்போது மின்சாரத்தில் இயங்குகின்றன.
பிரதமர்: அப்படியானால் மின்சார பேருந்து வந்துவிட்டதா?
மாணவன் : ஆமாம் சார் இப்போ வந்துவிட்டது...
பிரதமர்: தில்லியில் மத்திய அரசு எத்தனை மின்சாரப் பேருந்துகளை வழங்கியுள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?
மாணவன்: ஐயா, நிறைய உள்ளன.
பிரதமர்: 1200, மேலும் கூடுதலாக மின்சார பேருந்துகளை இயக்க வேண்டும். நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சுமார் 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பிரதமர் : சரி, பிரதமரின் சூரிய சக்தி மேற்கூரை வீடுகள் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக.. என்ன செய்வது, நான் சொல்லட்டுமா?
மாணவன்: ஆமாம் சார், சொல்லுங்க.
பிரதமர் : பாருங்கள், பிரதமரின் சூரிய சக்தி மேற்கூரை வீடுகள் திட்டம் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகும், எனவே ஒவ்வொரு வீட்டிலும் சூரிய சக்தி அமைப்பு ஏற்படுத்தப்படும் பணி  நடைபெறுகிறது.
மாணவன்: ஆமாம் சார்.
பிரதமர் : சூரிய சக்தியிலிருந்து வீட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தால் என்ன நடக்கும் தெரியுமா? குடும்பத்தின் மின்சார கட்டணம் பூஜ்ஜியமாக இருக்கும். நீங்கள் ஒரு சார்ஜரை நிறுவியிருந்தால், வாகனம் மின்சாரத்தில் இயங்குவதாக மாறும். சார்ஜிங் அங்கிருந்தே சூரிய ஒளி மூலம் செய்யப்படும், எனவே மின்சார வாகனங்களால் பெட்ரோல்-டீசல் செலவும் இருக்காது, மாசுபாடுகளும் இருக்காது.
மாணவன்: ஆமாம் சார்.
பிரதமர் : நீங்கள் பயன்படுத்திய பிறகு மின்சாரம் மிச்சம் இருந்தால் அரசு அதை வாங்கி கொண்டு உங்களுக்கு பணம் கொடுக்கும். அதாவது, வீட்டில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
பிரதமர் : ஜெய் ஹிந்த்.
மாணவன் : ஜெய் ஹிந்த்.
பிரதமர் : ஜெய் ஹிந்த்.
மாணவன் : ஜெய் ஹிந்த்.
பிரதமர் : ஜெய் ஹிந்த்.
மாணவன் : ஜெய் ஹிந்த்.

****

TS/PLM/AG/KR/DL


(Release ID: 2095946) Visitor Counter : 6