ஆயுஷ்
azadi ka amrit mahotsav

மகா கும்பமேளாவில் ஆயுஷ்

Posted On: 23 JAN 2025 4:56PM by PIB Chennai

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பக்தர்கள், யாத்ரீகர்கள், பார்வையாளர்களுக்கு ஆயுஷ் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.  புறநோயாளிகள் பிரிவுகள், அரங்குகள் போன்றவை முக்கிய ஈர்ப்புகளாக உருவாகி வருகின்றன. ஆயுஷ் அமைச்சகம் உத்தரபிரதேசத்தின் தேசிய ஆயுஷ் இயக்கத்துடன் இணைந்து கும்பமேளாவில் பல ஆயுஷ் மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.

உள்நாட்டு, சர்வதேச பக்தர்களுக்கு இலவச சுகாதார சேவைகளை ஆயுஷ் அமைச்சகம் வழங்குகிறது. இதில் இதுவரை 1.21 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆயுஷ் சேவைகளைப் பெற்றுள்ளனர்.

மகா கும்பமேளாவில் உள்ள ஆயுஷ் குழுவில் 80 ஆயுஷ் மருத்துவர்கள் மருத்துவ சேவைகளை வழங்குகிறார்கள். தினசரி சிகிச்சைக்கான யோகா அமர்வுகள் காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை நடத்தப்படுகின்றன.

ஆயுஷ் மருத்துவ முறைகள், மூலிகைச் செடிகள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த அறிவை பக்தர்களுக்கு வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

***

(Release ID: 2095482)

TS/PLM/AG/KR

 


(Release ID: 2095782) Visitor Counter : 13