புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசு தின அணிவகுப்பைக் காண 800 சிறப்பு விருந்தினர்களை அழைத்துள்ளது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

Posted On: 23 JAN 2025 12:00PM by PIB Chennai

ஜனவரி 26 அன்று புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைக் காண நாடு முழுவதிலும் இருந்து 800 சிறப்பு விருந்தினர்களுக்கு மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் முன்னோடி  திட்டங்களுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் குழுக்களின் சாதனைகளையும், இந்தியாவின் நிலையான எரிசக்தி மாற்றத்திற்கு அவர்களின் பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

அழைக்கப்பட்டவர்களில் பிரதமரின் சூரியசக்தி வீடுகள் திட்ட பயனாளிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை பணியாளர்கள்  உள்ளிட்டோர் அடங்குவர்.

இந்தப் பயணத்தின்போது சிறப்பு விருந்தினர்கள் மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, செயலாளர் நிதி கரே உள்ளிட்டோரைச் சந்திப்பார்கள்.

குடியரசு தின அணிவகுப்பைக் காண இந்த விருந்தினர்களை அழைப்பதன் மூலம், பசுமையான, நிலையான எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் மக்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

***

(Release ID: 2095358)

TS/PLM/AG/KR

 


(Release ID: 2095499) Visitor Counter : 21