தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

 ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 111-வது செயற்குழு கூட்டம் - முக்கிய சீர்திருத்தங்கள், உறுப்பினர் சேவைகளில் மேம்பாடு குறித்து ஆலோசனை

Posted On: 19 JAN 2025 1:13PM by PIB Chennai

 

 இபிஎஃப்ஓ அமைப்பின், மத்திய அறங்காவலர் வாரியத்தின் நிர்வாகக் குழுவின் (EC) 111-வது கூட்டம் நேற்று (2025 ஜனவரி 18) புதுதில்லியில் உள்ள இபிஎஃஓ தலைமை அலுவலகத்தில் தொழிலாளர் நலன் வேலைவாய்ப்பு அமைச்சகச் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் நடைபெற்றது.  அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், வேலை வழங்கும் நிறுவனங்கள், ஊழியர்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில்

 (i) மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்ட அமைப்பு (CITES) 2.01 அமலாக்கம்

(ii) உயர் ஊதியத்தில் ஓய்வூதியத்தின் நிலை

(iii) மாற்றுத் தகராறு தீர்வு (ADR)

செயல்முறைக்கான முன்மொழிவு,

 (iv) இபிஎஃப்ஓ-வின் கள அலுவலகங்களுக்கு நிர்வாக, நிதி அதிகாரங்களை ஒப்படைத்தல்

 (v) குறை தீர்க்கும் வழிமுறைகளை மறுஆய்வு செய்தல்

(vi) ஆணையர் பணிக்குள் பதவிகளை மறுபகிர்வு செய்தல்,

 (vii) பிற மனித வள மேம்பாட்டு விஷயங்கள் போன்றவை குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

விவாதங்களும், அதில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளும் இபிஎஃப்ஓ செயல்முறைகளில் நல்ல தாக்கத்தை பிரதிபலிப்பதாக அமைந்தது. மேம்பட்ட செயல்திறன்,  தாமதங்கள் குறைப்பு, உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிக திருப்தி ஆகியவற்றை இது ஏற்படுத்தும்.

***

PLM/KV

 


(Release ID: 2094268) Visitor Counter : 50