கலாசாரத்துறை அமைச்சகம்
பிரயாக்ராஜில் பசுமை மகா கும்பமேளா
Posted On:
07 JAN 2025 5:28PM by PIB Chennai
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த வலிமையான பிரச்சாரத்தையும் மேற்கொள்கிறது. ஜனவரி 31-ம் தேதி, நாடு முழுவதிலுமிருந்து 1,000-க்கும் அதிகமான சுற்றுச்சூழல், நீர்வள பாதுகாப்பு பணியாளர்களை ஒன்றிணைக்கும் வகையில் பசுமை கும்பமேளா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான நிகழ்ச்சி ஞான மஹாகும்ப மேளா - 2081 தொடரின் ஒரு பகுதியாகும். இந்த நிகழ்ச்சியை ஷிக்ஷா சமஸ்கிருதி உத்தன் நியாஸ் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அதன் தலைமைப் புரவலராக பணியாற்றுகிறார்.
பசுமை மகா கும்பமேளாவின் ஒரு பகுதியாக, இயற்கை, சுற்றுச்சூழல், நீர், தூய்மை தொடர்பான அம்சங்களில் தேசிய அளவிலான விவாதம் நடைபெற உள்ளது. இயற்கையின் ஐந்து அம்சங்களின் சமநிலையைப் பராமரிப்பது, சவால்களை எதிர்கொள்வது குறித்த தங்கள் நுண்ணறிவு, அனுபவங்களை துறை சார்ந்த வல்லுநர்கள் பகிர்ந்து கொள்வார்கள். கூடுதலாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை குறித்து மகா கும்பமேளாவுக்கு வருகை தருபவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும், அதனை ஊக்குவிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2090918
-----
TS/SV/KPG/DL
(Release ID: 2090976)
Visitor Counter : 22