பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 24 DEC 2024 7:12PM by PIB Chennai

புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபி-யின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார். முகமது ரஃபி ஒரு இசை மேதை என்றும், அவரது கலாச்சார  தாக்கம், தலைமுறைகளைக் கடந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

புகழ்பெற்ற முகமது ரஃபி சாஹபின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். அவர் ஒரு இசை மேதை. அவரது கலாச்சாரத்  தாக்கம் தலைமுறைகளைக் கடந்தது. ரஃபி-யின் பாடல்கள் பல்வேறு உணர்வுகளையும் பிரதிபலிப்பவை. அவரது பன்முகத்தன்மையும் விரிவானது. அவரது இசை, மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை சேர்க்கட்டும்.”

-----

TS/PLM/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2087704) வருகையாளர் எண்ணிக்கை : 76