பிரதமர் அலுவலகம்
குவைத்தில் தொழிலாளர் முகாமைப் பிரதமர் பார்வையிட்டார்
Posted On:
21 DEC 2024 7:00PM by PIB Chennai
குவைத் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக பிரதமர் திரு நரேந்திர மோடி குவைத்தின் மினா அப்துல்லா பகுதியில் சுமார் 1500 இந்தியர்கள் உள்ள தொழிலாளர் முகாமுக்குச் சென்றார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பட்ட இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் நல்வாழ்வு குறித்துக் கேட்டறிந்தார்.
வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் நலனுக்குப் பிரதமர் அளிக்கும் முக்கியத்துவத்தின் அடையாளமாக இந்த தொழிலாளர் முகாமுக்கு அவரது வருகை அமைந்தது. கடந்த சில ஆண்டுகளில், வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக இ-மைக்ரேட் தளம், மதாத் தளம், மேம்படுத்தப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாதுகாப்புத் திட்டம் (பிரவாசி பாரதிய பீமா யோஜனா) போன்ற பல தொழில்நுட்ப அடிப்படையிலான முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.
*****
PLM/KV
(Release ID: 2086841)
Visitor Counter : 25
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam