பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாம் இயக்கத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் அசாதாரண துணிச்சல், தியாகங்களை நினைவுகூரும் தருணமாக ஸ்வாஹித் தினம் திகழ்கிறது- பிரதமர்

Posted On: 10 DEC 2024 4:16PM by PIB Chennai

அசாம் இயக்கத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் அசாதாரணமான துணிச்சல், தியாகங்களை நினைவுகூரும் தருணம் ஸ்வாஹித் தினம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

ஸ்வஹித் தினம் என்பது அசாம் இயக்கத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் அசாதாரணமான துணிச்சல், தியாகங்களை நினைவுகூரும் தருணம் இது  என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களது அசைக்க முடியாத மன உறுதியும் தன்னலமற்ற சேவையும் அம்மாநிலத்தின் தனித்துவமிக்க கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்க உதவியதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்களின் வீரம்,  அசாம் மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.

----

TS/SV/KPG/DL


(Release ID: 2082925) Visitor Counter : 36