உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, ஒடிசாவின் புவனேஸ்வரில் காவல்துறை தலைமை இயக்குநர்கள்/காவல்துறை தலைவர்களின் 59 வது மாநாட்டைத் தொடங்கி வைத்தார்
Posted On:
29 NOV 2024 9:18PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா ஒடிசாவின் புவனேஸ்வரில் காவல்துறை தலைமை இயக்குநர்கள்/காவல்துறை தலைவர்களின் 59 வது மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மாநாட்டின் 2-வது மற்றும் 3-வது நாட்களன்று மாநாட்டு நடவடிக்கைகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்குவார்.இந்த மாநாட்டில், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் காவல்துறை தலைமை இயக்குநர்கள்/காவல்துறை தலைவர்கள் மற்றும் சி.ஏ.பி.எஃப் / சி.பி.ஓக்களின் தலைவர்கள் நேரடியாகவும், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு உயர் அதிகாரிகள் மெய்நிகர் முறையிலும் கலந்து கொள்கிறார்கள். தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை இணை அமைச்சர், மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா புலனாய்வு பணியக அதிகாரிகளுக்கு மெச்சத்தகுந்த சேவைக்கான காவலர் பதக்கங்களை வழங்கினார் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் 'காவல் நிலையங்களின் தரவரிசை 2024' என்ற புத்தகத்தை வெளியிட்டார். மூன்று சிறந்த காவல் நிலையங்களுக்கும் திரு ஷா கோப்பைகளை வழங்கினார்.
தனது துவக்க உரையின் போது, 2024 பொதுத் தேர்தல்களை சுமூகமாக நடத்தியதற்காகவும், 3 புதிய குற்றவியல் சட்டங்களை தடையின்றி அமல்படுத்தியதற்காகவும் காவல்துறை தலைமைக்கு திரு அமித் ஷா பாராட்டு தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்த வழிவகுத்த குறிப்பிடத்தக்க சாதனைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திருப்தி தெரிவித்தார்.
3 புதிய குற்றவியல் சட்டங்கள், நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பின் நெறிமுறைகளை தண்டனை அடிப்படையிலிருந்து நீதி சார்ந்ததாக மாற்றியுள்ளன என்று திரு அமித் ஷா கூறினார். புதிய சட்டங்களின் உணர்வு இந்திய பாரம்பரியத்தில் வேரூன்றி உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
2047-ஆம் ஆண்டுக்குள் 'வளர்ந்த பாரதம்' என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அடைவதிலும், 2027-ஆம் ஆண்டுக்குள் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதிலும் பாதுகாப்பு அமைப்பின் பங்கை மத்திய உள்துறை அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார். கிழக்கு எல்லையில் வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்கள், குடியேற்றம் மற்றும் நகர்ப்புற காவல்துறையின் போக்குகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கூறினார். பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை அமல்படுத்த உத்திசார் திட்டம் மற்றும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு திரு ஷா அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079248
************
BR/KV
(Release ID: 2079312)
Visitor Counter : 23
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam