பிரதமர் அலுவலகம்
கூட்டுறவு நிறுவனங்களை தற்சார்புடையதாகவும், வலிமையானதாகவும் மாற்றுவதே 'கூட்டுறவின் மூலம் வளம்' என்ற தொலைநோக்குப் பார்வையின் நோக்கமாகும்: பிரதமர்
Posted On:
25 NOV 2024 2:55PM by PIB Chennai
கூட்டுறவு நிறுவனங்களை தற்சார்புடையதாகவும், வலிமையானதாகவும் மாற்றுவதே ‘கூட்டுறவின் மூலம் வளம்' என்ற தொலைநோக்குப் பார்வையின் நோக்கம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (25.11.2024) குறிப்பிட்டுள்ளார். மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா எழுதிய கட்டுரை, நிர்வாக, கொள்கை சீர்திருத்தங்கள் கூட்டுறவுத் துறைக்கு எவ்வாறு புத்துயிர் அளித்துள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் தள பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நிர்வாக சீர்திருத்தங்களும், கொள்கை சீர்திருத்தங்களும் கூட்டுறவுத் துறைக்கு எவ்வாறு புத்துயிர் அளித்துள்ளன என்பதை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சரான திரு அமித் ஷா (@AmitShah) எடுத்துரைத்துள்ளார். கூட்டுறவு நிறுவனங்களை தன்னம்பிக்கை கொண்டதாகவும், வலுவானதாகவும் மாற்றுவதை, ‘கூட்டுறவின் மூலம் வளம்’ என்ற தொலைநோக்குப் பார்வை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
***
(Release ID: 2076826)
TS/PLM/AG/RR
(Release ID: 2076876)
Visitor Counter : 14