தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஐஎஃப்எஃப்ஐ 2024 இந்திய சினிமாவின் எதிர்காலத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
கோவாவில் நடைபெற்று வரும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎஃப்எஃப்ஐ) நாடு முழுவதும் உள்ள இளம் திரைப்பட படைப்பாளர்களின் திறமை, படைப்பாற்றல், ஆர்வம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை இந்த விழா கொண்டாடுகிறது.
கதை சொல்லலில் சிறந்து விளங்கும் சினிமா மாணவர்களை அங்கீகரிக்கும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC) மூலம், இந்த மதிப்புமிக்க விழாவில் கிட்டத்தட்ட 350 மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
இந்த ஆண்டு இளம் திரைப்பட தயாரிப்பாளர் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள 13 புகழ்பெற்ற திரைப்பட நிறுவனங்களைச் சேர்ந்த 279 வளர்ந்து வரும் திரைப்பட கலைஞர்களையும், வடகிழக்கைச் சேர்ந்த 67 திறமையான திரைப்பட தயாரிப்பாளர்களையும் ஒன்றிணைக்கிறது.
55 வது ஐஎஃப்எஃப்ஐ, சினிமா சிறப்புக்கும், கலாச்சாரங்களை இணைக்கவும், எழுச்சியூட்டும் கதைகளுக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளது.
*****
PLM/KV
(Release ID: 2076636)
Visitor Counter : 11