தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் "நாளைய படைப்பு மனங்கள்" என்பதன் 4-வது பதிப்பு தொடங்கப்பட்டது
"நாளைய படைப்பு மனங்கள்" என்பதன் 4 வது பதிப்பு 55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று (21.11.2024) தொடங்கப்பட்டது. இது அடுத்த தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்களை வளர்ப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் இந்தியாவின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இது தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தால் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா காலத்தில் தொடங்கப்பட்ட முன்முயற்சியாகும். ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் வளர்ந்து வரும் திறமைகளுக்கான நாட்டின் முன்னணி தளங்களில் ஒன்றாக இது வேகமாக அங்கீகாரம் பெற்று வருகிறது.
தகவல், ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு தனது தொடக்க உரையில், இந்த ஆண்டு 13 திரைப்படப் பிரிவுகளில் இருந்து 100 நம்பிக்கைக்குரிய இளம் திறமையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 10 துறைகளில் இருந்து 75 திறமையாளர்கள் என இருந்தது என்றார். "இந்த ஆண்டு, இளம் படைப்பாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைக்கவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை நாளைய படைப்பு மனங்கள் வழங்குகிறது. உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறக்கும் திரைப்பட சந்தையை நோக்கிய ஒரு படிக்கட்டை இது குறிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
2025 பிப்ரவரியில் நடைபெறவுள்ள உலக ஒலி, ஒளி,பொழுதுபோக்கு உச்சி மாநாடு (வேவ்ஸ்) குறித்தும் அவர் பேசினார். இது உலகளாவிய ஊடகத் தளத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "இந்தியாவில் உருவாக்கு சவால்- சீசன் 1"-ல் ஈடுபட நான் உங்களை ஊக்குவிக்கிறேன். இது அதிக சர்வதேச வெளிப்பாட்டிற்கான ஏவுதளமாக செயல்படும்."என்றும் அவர் கூறினார்.
மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் நீரஜா சேகர், "கடந்த நான்கு ஆண்டுகளில், நாளைய படைப்பு மனங்கள் இளம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் விரும்பும் தளமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு, 13 வெவ்வேறு பிரிவுகளை ஊக்குவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், இது திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் படைப்பு வாழ்க்கைக்கான இந்திய இளைஞர்களிடையே வளர்ந்து வரும் ஆர்வத்தின் பிரதிபலிப்பு, "என்று கூறினார்.
தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அபூர்வா சந்திரா, நாளைய படைப்பு மனங்கள் என்பதன் முக்கிய அம்சமான 48 மணி நேர திரைப்படத் தயாரிப்பு சவாலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். "இந்த சவால் உங்கள் படைப்பாற்றலை மட்டுமல்ல, ஒரு குழுவாக, ஒத்திசைவாக செயல்படும் திறனையும் சோதிக்கிறது. இந்தத் துறையில் வெற்றிக்கான திறவுகோல் திறமை மட்டுமல்ல, உங்கள் யோசனைகளின் சந்தைப்படுத்தலும் ஆகும்" என்று அவர் கூறினார்.
நெட்ஃப்ளிக்சின் பொதுக் கொள்கை இயக்குநர் மஹிமா கவுல், நாளைய படைப்பு மனங்களுக்கான நெட்ஃப்ளிக்சின் ஆதரவை வெளிப்படுத்தினார். "வாய்ஸ்பாக்ஸ் முன்முயற்சியின் கீழ் இந்தியா முழுவதும் குரல் கொடுக்கும் கலைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதில் நாளைய படைப்பு மனங்களுடன் ஒத்துழைப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் பங்கேற்பாளர்களில் 50%-க்கும் அதிகமானோர் பெண்கள், இது மாறுபட்ட குரல்களை மேம்படுத்துவதற்கான எங்கள் இலக்கை பிரதிபலிக்கிறது. கூடுதலாக, நாளைய படைப்பு மனங்களின் சிறந்த கலைஞர்கள் நெட்ஃப்ளிக்சின் சிறப்பு திட்டமான சுதந்திரத்தின் அமிர்தக் கதைகளுக்குப் பங்களிப்பு செய்வார்கள். அங்கு அவர்கள் இந்தியாவின் சுதந்திர இயக்கம் தொடர்பான கதைகளை விவரிப்பார்கள் "என்று மஹிமா தெரிவித்தார்.
புகழ்பெற்ற பாடலாசிரியரும், மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் தலைவருமான பிரசூன் ஜோஷி, இந்தியா முழுவதும் படைப்பாக்கத் திறமைகளை வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து ஆழ்ந்த புலமையுடன் உரையாற்றினார். "நம் நாட்டில் கதைகள் மற்றும் திறமைகளுக்கு பஞ்சமில்லை, ஆனால் படைப்பு செயல்முறையை நாம் தெளிவுபடுத்தி, இந்தத் திறமைகளுக்கு ஒரு தளத்தை வழங்க வேண்டும். கதைசொல்லலை பெரிய நகரங்களுக்கு மட்டும் என்று நாம் கட்டுப்படுத்தினால், நாடு வழங்க வேண்டிய நம்பமுடியாத பன்முகத்தன்மையை நாம் இழந்துவிடுவோம். இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் படைப்பாளிகளுக்கு ஒரு மேடையை வழங்குவதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைக்க நாளைய படைப்பு மனங்கள் உதவுகிறது, "என்று ஜோஷி குறிப்பிட்டார்.
ஷார்ட்ஸ் இன்டர்நேஷனலின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கார்டர் பில்ச்சர், இந்திய சினிமாவின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை எடுத்துரைத்தார். அற்புதமான சவாலைத் தொடங்க ஐந்து அணிகள் தயாராக உள்ளன என்று அவர் அறிவித்தார்.
முந்தைய பதிப்புகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில், கடந்த ஆண்டுகளைச் சேர்ந்த ஐந்து நாளைய படைப்பு மனங்களின் சாம்பியன்கள், திரைத்துறையில் அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். இந்த முன்னாள் மாணவர்கள் 48 மணி நேர திரைப்படத் தயாரிப்பு சவாலின் போது தற்போதைய பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டுவார்கள், புதிய தலைமுறை படைப்பாளர்களுக்கு வழிகாட்ட அவர்களின் மதிப்புமிக்க நுண்ணறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.
***
TS/SMB/AG/DL
(Release ID: 2075621)
Visitor Counter : 23
Read this release in:
English
,
Khasi
,
Urdu
,
Hindi
,
Konkani
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Kannada
,
Malayalam