தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பிரம்மாண்டமான தொடக்க விழா நாளை நடைபெறுகிறது
இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 55-வது பதிப்பு நவம்பர் 20, 2024 அன்று மாலை 5:00 மணிக்கு கோவாவில் உள்ள டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் ஒரு பிரகாசமான தொடக்க விழாவுடன் தொடங்க உள்ளது. ஆஸ்திரேலிய திரைப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் கிரேசி இயக்கியுள்ள 'பெட்டர் மேன்' படத்தின் தொடக்க விழாவின் சிவப்பு கம்பள பிரீமியர் காட்சி திரையிடலுடன் பிற்பகல் 2:00 மணிக்கு ஐநாக்ஸ் பனாஜிமில் நடைபெறும்.
ஓப்பனிங் ஃபிலிம் பிரீமியர்
தொடக்க விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில், கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், 2004 முதல் சர்வதேச சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வரும் அழகிய கடலோர மாநிலமான கோவாவுக்கு விருந்தினர்களை வரவேற்க உள்ளார். 'பெட்டர் மேன்' தயாரிப்புக் குழுவுடன் இந்தத் தலைவர்களின் இருப்பு, உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சார மற்றும் சினிமா கொண்டாட்டமாக திருவிழாவின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நட்சத்திரங்கள் நிறைந்த தொடக்க விழா
சினிமா ஜாம்பவான்களின் முன்னிலையில் இந்தக் கோலாகலத் தொடக்க விழா, சினிமா ஆர்வலர்களின் இதயங்களில் நீண்ட காலத்திற்கு பொறிக்கப்படும் கலாச்சார நிகழ்ச்சிகளின் மறக்க முடியாத நினைவுகளை வழங்கும்.
தொடக்க விழாவை பிரபல திரைப்பட பிரபலங்களான அபிஷேக் பானர்ஜி, பூமி பெட்னேகர் ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள். 55 வது ஐ.எஃப்.எஃப்.ஐ நவம்பர் 20 முதல் 28, 2024 வரை தனது ஒரு வார கால சினிமா சிறப்புக்கான பயணத்தைத் தொடங்குவதால் இந்த மாலை இந்திய சினிமாவின் சிறந்தவற்றை ஒன்றிணைக்கும். இந்த விழாவில் ஏராளமான திரைப்பட பிரபலங்கள் பங்கேற்பார்கள்,
சுபாஷ் கய், தினேஷ் விஜன், அமர் கௌசிக், என்.எம்.சுரேஷ், ஆர்.கே.செல்வமணி, ஐசரி கணேசன், ரவி கொட்டராக்கரா மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி போன்ற பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். பிரபல நடிகர்கள் நாகார்ஜுனா, நித்யா மேனன், ஆம்லா, விக்ராந்த் மாஸ்ஸி, ரகுல் ப்ரீத், மனுஷி சில்லர், போமன் இரானி, ராஜ்குமார் ராவ், அபிஷேக் பானர்ஜி, ஜெய்தீப் அஹ்லாவத், ரன்தீப் ஹூடா, சன்யா மல்ஹோத்ரா, ஜெயம் ரவி, ஜாக்கி பாக்னானி, ஆர்.சரத்குமார், முக்தா பார்வே, சோனாலி குல்கர்னி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
நட்சத்திர வரிசையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் உள்ளார், அவர் சிறப்பு உரையுடன் பங்கேற்பாளர்களை ஊக்குவிப்பார்.
சிறப்பு கவனம்: ஆஸ்திரேலியா
இந்த ஆண்டு ஐ.எஃப்.எஃப்.ஐ ஆஸ்திரேலியாவை ஃபோகஸ் நாடாக இடம்பெறச் செய்யும். ஆஸ்திரேலிய ஃபர்ஸ்ட் நேஷன்ஸ் நடனக் குழுவான ஜன்னாவி டான்ஸ் கிளான், சர்வதேச கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் ஒரு கவர்ச்சிகரமான கலாச்சார நிகழ்ச்சியை வழங்கும்.
இந்தியாவின் மாறுபட்ட கலாச்சார மற்றும் மத பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் மூச்சடைக்கக்கூடிய நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா தொடங்கும். பார்வையாளர்கள் இந்திய கலாச்சாரத்தின் ஆன்மீக சாரத்தை அனுபவிப்பார்கள்.
அதே நேரத்தில் "டைம்லெஸ் சோல்ஸ்" என்ற கவிதாஞ்சலி, ராஜ் கபூர், ஏ.என்.ஆர் மற்றும் முகமது ரஃபி போன்ற சினிமா ஜாம்பவான்களை காட்சிகள், இசை மற்றும் கவிதைகள் மூலம் கௌரவிக்கும்.
இந்த விழா இந்திய சினிமாவின் பரிணாம வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்தும், மௌன சகாப்தத்திலிருந்து நவீன சினிமா தலைசிறந்த படைப்புகளுக்கு அதன் பயணத்தின் மூலம் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும்.
ஐ.எஃப்.எஃப்.ஐயின் வரலாற்றில் முதல் முறையாக, தொடக்க விழாவில் நேரடி இந்திய சைகை மொழி விளக்கம் இடம்பெறும், இது செவிப்புலன் சிரமங்கள் உள்ளவர்கள் உட்பட அனைத்து பங்கேற்பாளர்களும் திருவிழாவில் முழுமையாக ஈடுபடவும் அனுபவிக்கவும் முடியும் என்பதை உறுதி செய்கிறது.
இந்தியாவின் 55 வது சர்வதேச திரைப்பட விழா சினிமா கலை மற்றும் படைப்பாற்றலின் பிரமாண்டமான கொண்டாட்டமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. 55-வது திரைப்படவிழாவுக்கான கவுண்டவுன் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள திரைப்பட ஆர்வலர்கள் கோவாவில் நடைபெறும் திரைப்பட விழாவின் ஒரு வார கால கொண்டாட்டத்திற்காக காத்திருக்கின்றனர்.
***
(Release ID: 2074762)
PKV/AG/KR
(Release ID: 2075014)
Visitor Counter : 13