பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் காந்திநகரில் 'ரீ-இன்வெஸ்ட்' 2024 தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 16 SEP 2024 2:58PM by PIB Chennai

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத்; குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல்; ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு அவர்களே; ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா அவர்களே; மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ் ஆகியோர் இங்கு கூடியிருக்கிறார்கள். சத்தீஸ்கர், கோவா முதலமைச்சர்களும் இங்கு வந்துள்ளனர். மேலும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எரிசக்தி அமைச்சர்களும் உள்ளனர். இதைப் போலவே, ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு அமைச்சர், டென்மார்க்கின் தொழில்-வர்த்தகத்துறை அமைச்சர் உட்பட வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விருந்தினர்கள், எனது அமைச்சரவை சகாக்கள் பிரல்ஹாத் ஜோஷி, ஸ்ரீபத் நாயக் மற்றும் பல நாடுகளில் இருந்து வந்துள்ள  பிரதிநிதிகளே, தாய்மார்களே!

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்திருக்கும் விருந்தினர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இது ரீஇன்வெஸ்ட் மாநாட்டின் நான்காவது பதிப்பாகும், அடுத்த மூன்று நாட்களில், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் கொள்கைகளின் எதிர்காலம் குறித்த ஆழமான விவாதங்கள் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தத் துறையில் விரிவான அனுபவம் கொண்ட நமது மூத்த முதலமைச்சர்கள் பலரும் நம்முடன் உள்ளனர். இந்த விவாதங்களின்போது, அவர்களின் மதிப்புமிக்க அறிவாற்றலில் இருந்து நாம் பயனடைவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இங்கு நாம் பரிமாறிக் கொள்ளும் அறிவு ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மேம்பாட்டிற்கு பங்களிக்கும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இருதரப்பு விவாதங்களுக்காக அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு விஜயம் செய்த ஒரு சம்பவத்தை நான் நினைவு கூர்கிறேன். தில்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பத்திரிகையாளர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அந்த நேரத்தில், பல நாடுகள் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகளுக்கான லட்சிய இலக்குகளை அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் எனக்கு ஏதேனும் அழுத்தம் ஏற்பட்டதா என்று பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு நான், "மோடி வந்துட்டார்... இங்கே வெளிப்புற அழுத்தம் எதுவும் இல்லை. ஆனால் உண்மையில் நான் உணரும் ஒரு அழுத்தம் உள்ளது என்று நான் சேர்த்துக் கொண்டேன் - எதிர்கால சந்ததியினரின் மீதான பொறுப்பின் அழுத்தம், இன்னும் பிறக்காத குழந்தைகள், அவர்களின் பிரகாசமான எதிர்காலம் குறித்து நான் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன். அந்த அழுத்தத்தை நான் சுமக்கிறேன், அதனால்தான் வருங்கால தலைமுறையினரின் நலனுக்காக பணியாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன். இன்றும் கூட, இந்த உச்சி மாநாடு நமக்கு அடுத்த இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தலைமுறைக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான உத்தரவாதமாக இருக்கும். உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒன்றை நிறைவேற்றுவதற்காக நீங்கள் அனைவரும் இங்கு கூடியிருக்கிறீர்கள். மகாத்மா காந்தியின் நினைவாக கட்டப்பட்டுள்ள இந்த மகாத்மா கோயிலுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வணக்கம்!

***

(Release ID: 2055344)

MM/AG/KR


(Release ID: 2070794) Visitor Counter : 29