தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருதுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது 'சன் ப்ளவர்ஸ் வேர் தி ஃபர்ஸ்ட் ஒன்ஸ் டு நோ’
Posted On:
04 NOV 2024 5:55PM by PIB Chennai
இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மாணவர் தயாரித்த படமான 'சன் ப்ளவர்ஸ் வேர் தி ஃபர்ஸ்ட் ஒன்ஸ் டு நோ (SUNFLOWER WAS FIRST ONES TO KNOW) 2025-ம் ஆண்டுக்கான லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருது போட்டியில் திரையிட தகுதி பெற்றுள்ளது.
எஃப்.டி.ஐ.ஐ மாணவர் சிதானந்தா எஸ் நாயக் இயக்கிய இந்தக் குறும்படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவின் லா சினிஃப் தேர்வில் முதல் பரிசை வென்றது. இந்திய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மரபுகளால் ஈர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்தக் கன்னட மொழி திரைப்படத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சிதானந்த் எஸ்.நாயக் எஃப்.டி.ஐ.ஐ.யில் மாணவராக இருந்தபோது தயாரிக்கப்பட்ட இந்தப் படம், சூரஜ் தாக்கூர் (ஒளிப்பதிவு), மனோஜ் வி (படத்தொகுப்பு) மற்றும் அபிஷேக் கதம் (ஒலி வடிவமைப்பு) உள்ளிட்ட திறமையான குழுவின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துகிறது. கிராம சேவலைத் திருடும் ஒரு வயதான பெண்ணை மையமாகக் கொண்ட கதை, சமூகத்திற்குள் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. ஒழுங்கை மீட்டெடுக்கும் முயற்சியில், பெண்ணின் குடும்பத்தினர் நாடு கடத்தப்படுகிறார்கள்.
கேன்ஸில் உள்ள லா சினிஃப் நடுவர் குழு இந்தத் திரைப்படத்தை அதன் ஒளிரும் கதை சொல்லல் மற்றும் தேர்ந்த இயக்கத்திற்காக பாராட்டியது.
திரைப்பட இயக்குனர் சிதானந்தா எஸ் நாயக் கூறுகையில், எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்தக் கதையை சொல்ல வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். கதைகளை வெறுமனே கேட்பது மட்டுமல்லாமல், அவற்றை உண்மையாக வாழும் அனுபவத்தை மீண்டும் உருவாக்குவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது - இந்த அனுபவம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன் எனக் கூறினார்.
பெங்களூரு சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த இந்தியப் போட்டிக்கான விருது உட்பட திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்ற இந்தப் படம் இப்போது உலகின் சிறந்த குறும்படங்களுடன் போட்டியிடத் தயாராக உள்ளது.
-----
(Release ID 2070656)
TS/PKV/KPG/KR
(Release ID: 2070790)
Visitor Counter : 6