பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நடைபெற்ற தேசிய பிரதமர் விஸ்வகர்மா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
20 SEP 2024 3:17PM by PIB Chennai
பாரத் மாதா கி - ஜெய்!
பாரத் மாதா கி - ஜெய்!
அமராவதி, வார்தா உட்பட மகாராஷ்டிராவின் அனைத்து குடிமக்களுக்கும் வாழ்த்துக்கள்!
இரண்டு நாட்கள் முன்பாக நாம் விஸ்வகர்மா பூஜை பண்டிகையைக் கொண்டாடினோம். இன்று, புனித பூமியான வார்தாவில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் வெற்றியை நாம் கொண்டாடுகிறோம். 1932-ம் ஆண்டு இதே நாளன்றுதான் மகாத்மா காந்தியடிகள் தீண்டாமைக்கு எதிரான தனது இயக்கத்தைத் தொடங்கினார் என்பதால், இன்றைய தினம் சிறப்பானதாகும். இந்தச் சூழலில், வினோபா பாவேயின் புனித பூமியும், மகாத்மா காந்தியின் கர்மபூமி மற்றும் வார்தா பூமியில் விஸ்வகர்மா திட்டத்தின் ஓராண்டு கொண்டாட்டம் என்பது சாதனை மற்றும் உத்வேகத்தின் சங்கமமாகும். இது 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற நமது தீர்மானத்திற்கு புதிய சக்தியை வழங்கும். விஸ்வகர்மா திட்டத்தின் வாயிலாக, உழைப்பின் மூலம் வளத்தையும், திறமையின் மூலம் சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்க நாம் உறுதி பூண்டுள்ளோம். வார்தாவில் அண்ணல் அளித்த உத்வேகம் இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற நமக்கு உதவும். இந்த முயற்சியில் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்கள்
இன்று, அமராவதியில் பிரதமரின் மித்ரா பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இன்றைய பாரதம் தனது ஜவுளித் தொழிலை, உலக சந்தையில் முதலிடத்திற்கு கொண்டு செல்ல பாடுபட்டு வருகிறது. இந்தியாவின் ஜவுளித் துறையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகால பெருமையை மீட்டெடுப்பதே நாட்டின் குறிக்கோள். அமராவதியில் உள்ள பிரதமரின் மித்ரா பூங்கா இந்த திசையில் மற்றொரு குறிப்பிடத்தக்க படியாகும். இந்த சாதனைக்காக உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்கள்
விஸ்வகர்மா திட்டத்தின் முதலாம் ஆண்டு விழாவிற்கு நாங்கள் மகாராஷ்டிராவைத் தேர்ந்தெடுத்தோம், வார்தா என்ற புனித பூமியைத் தேர்ந்தெடுத்தோம், ஏனென்றால் விஸ்வகர்மா திட்டம் என்பது வெறும் அரசின் திட்டம் மட்டுமல்ல. இந்த முயற்சி இந்தியாவின் பழமையான திறன்களை 'வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு' பயன்படுத்துவதற்கான ஒரு செயல் திட்டமாகும். இந்தியாவின் வளத்தை எடுத்துக்காட்டுகின்ற வரலாற்றில் பல புகழ்பெற்ற அத்தியாயங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த செழிப்பின் அடித்தளம் எது? அது நம் பாரம்பரிய திறமை! அன்றைய நமது கைவினைத்திறன், பொறியியல், அறிவியல்! உலகிலேயே மிகப்பெரிய ஜவுளி உற்பத்தியாளராக இருந்தோம். நமது உலோகவியல் உலக அளவில் ஈடு இணையற்றது. மட்பாண்டங்கள் முதல் கட்டிட வடிவமைப்புகள் வரை, எந்த ஒப்பீடும் இல்லை. இந்த ஞானத்தையும் அறிவியலையும் ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கியது யார்? தச்சர்கள், கொல்லர்கள், பொற்கொல்லர்கள், குயவர்கள், சிற்பிகள், செருப்பு தைப்பவர்கள், கொத்தனார்கள் மற்றும் இதுபோன்ற பிற தொழில்கள் இந்தியாவின் செழிப்புக்கு அடித்தளமாக அமைந்தன. இதனால்தான் காலனித்துவ காலத்தில் இந்த உள்நாட்டு திறனை அகற்ற ஆங்கிலேயர்கள் சதி செய்தனர். வார்தா மண்ணிலிருந்து காந்தியடிகள் கிராமப்புறத் தொழில்களை ஊக்குவித்தார்.
ஆனால் நண்பர்களே,
சுதந்திரத்திற்குப் பிறகு அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இந்த திறமைக்கு உரிய மரியாதையை வழங்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. இந்த அரசுகள் விஸ்வகர்மா சமூகத்தை தொடர்ந்து புறக்கணித்து வந்தன. நமது கைவினைத்திறனையும், திறன்களையும் மதிக்க மறந்ததால், இந்தியாவும், முன்னேற்றம் மற்றும் நவீனத்திற்கான பந்தயத்தில் பின்தங்கியது.
நண்பர்களே,
தற்போது, சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த பாரம்பரிய திறன்களுக்கு புதிய சக்தியை அளிக்க எங்கள் அரசு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற 'பிரதமரின் விஸ்வகர்மா' திட்டத்தைத் தொடங்கினோம். இந்த திட்டத்தின் முக்கிய தத்துவம் 'சம்மன்' (மரியாதை), 'சமர்த்யா' (திறன்) மற்றும் 'சம்ரிதி' (செழிப்பு)! அதாவது, பாரம்பரிய திறன்களுக்கு மரியாதை, கைவினைஞர்களுக்கு அதிகாரமளித்தல், நமது விஸ்வகர்மா சகோதரர்களின் வாழ்க்கையில் வளம் – இவையே நமது இலக்கு.
சகோதர சகோதரிகளே,
பாரம்பரியத்துடனும் முன்னேற்றத்துடனும் நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். மரியாதை மற்றும் வளர்ச்சிக்காக நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து மகாராஷ்டிராவின் பெருமையைப் பாதுகாப்போம், ஒன்றாக இணைந்து மகாராஷ்டிராவின் பெருமையை மேம்படுத்துவோம். மகாராஷ்டிராவின் கனவுகளை நிறைவேற்றுவோம். இந்த உணர்வுடன், இந்த முக்கியமான திட்டங்களுக்கு நீங்கள் காட்டியுள்ள மகத்தான ஆதரவைப் பார்க்கும்போது, விதர்பா மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையில் இந்தத் திட்டங்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை என்னால் உணர முடிகிறது. நான் மீண்டும் ஒருமுறை விஸ்வகர்மாவைச் சேர்ந்த அனைத்து விஸ்வகர்மா சகோதர சகோதரிகளுக்கும், விதர்பா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த எனது சக குடிமக்களுக்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடன் சொல்லுங்கள் -
பாரத் மாதா கி - ஜெய்!
உங்கள் இரு கைகளையும் உயர்த்தி முழு பலத்துடன் சொல்லுங்கள் -
பாரத் மாதா கி - ஜெய்!
பாரத் மாதா கி - ஜெய்!
மிகவும் நன்றி.
***
(Release ID: 2057002)
MM/AG/KR
(Release ID: 2070787)
Visitor Counter : 18
Read this release in:
Urdu
,
Marathi
,
Odia
,
English
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam