பிரதமர் அலுவலகம்
கனடாவில் இந்து ஆலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
04 NOV 2024 8:33PM by PIB Chennai
கனடாவில் உள்ள இந்து ஆலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையும், இந்திய தூதரக அதிகாரிகளை மிரட்டும் போக்குகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தியாவின் உறுதியான தீர்மானத்தை வலியுறுத்திய அவர், கனடா அரசு, நீதி மற்றும் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் கூறியுள்ளதாவது:
"கனடாவில் இந்து ஆலயம் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோல நமது தூதரக அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் கண்டிக்கத்தக்கவை. இதுபோன்ற வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசு நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். "
BR/TS/KR
***
(रिलीज़ आईडी: 2070766)
आगंतुक पटल : 74
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam