பிரதமர் அலுவலகம்
ஆரம்ப் 6.0 விழாவில் இளம் குடிமைப் பணியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 OCT 2024 9:13PM by PIB Chennai
ஆரம்ப் 6.0, விழாவில் இளம் குடிமைப் பணி அதிகாரிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார். மக்கள் பங்களிப்பு உணர்வுடன் நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்து இளம் குடிமைப் பணியாளர்களுடன் பிரதமர் விரிவாக விவாதித்தார். வலுவான பின்னூட்ட வழிமுறைகள் மற்றும் குறை தீர்க்கும் முறைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை மேம்படுத்துமாறு இளம் குடிமைப் பணியாளர்களை பிரதமர் வலியுறுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: "ஆரம்ப் 6.0 விழாவின் போது இளம் குடிமைப்பணியாளர்களுடன் கலந்துரையாடினேன். மக்கள் பங்கிடரி உணர்வுடன் நிர்வாகத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம். வலுவான பின்னூட்ட வழிமுறைகள் மற்றும் குறை தீர்க்கும் முறைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தேன்.குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை மேம்படுத்துமாறு இளம் குடிமைப் பணியாளர்களை வலியுறுத்தினேன்."
***
(Release ID: 2069731)
TS/IR/RS/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2070533)
வருகையாளர் எண்ணிக்கை : 106
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam