தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியா முழுவதும் உள்ள வளர்ந்து வரும் விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு
Posted On:
29 OCT 2024 8:35PM by PIB Chennai
நீங்கள் படைப்பாற்றல் மிக்கவராக இருந்தால், ஒரு கதையை எப்படிச் சொல்வது என்பதைத் தெரிந்துகொண்டிருந்தால் உங்களுக்கு நல்ல வாய்ப்பு காத்தகருக்கிறது. 30-வினாடி விஷுவல் எஃபெக்ட்ஸ் (வி.எஃப்.எக்ஸ்) கிளிப் மூலம் "அன்றாட வாழ்வின் மீநாயகன் (சூப்பர் ஹீரோ)" என்ற கருப்பொருளை உயிர்ப்புடன் வெளிப்படுத்தும் திறன் இருந்தால் , 5 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பிரத்யேக ஸ்டுடியோ அனுபவப் பயிற்சிகள் உள்ளிட்ட பரிசுகளை வெல்ல உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. பிப்ரவரியில் நடைபெறும் உலக அளவிலான உலக ஆடியோ விஷுவல் உச்சிமாநாட்டில் உங்கள் படைப்பு, நிபுணர்கள் முன் காட்சிப்படுத்தப்படும்.
இந்தியாவில் வி.எஃப்.எக்ஸ் சூழலை மேம்படுத்த, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், இந்தியாவின் முன்னணி அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் நிறுவனமான ஏ.பி.ஏ.ஐ உடன் இணைந்து, உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு (வேவ்ஸ்) 2025-மாநாட்டின் ஒரு பகுதியாக டபிள்யூ.ஏ.எஃப்.எக்ஸ் வேவ்ஸ் வி.எஃப்.எக்ஸ் சவாலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியானது, 'இந்தியாவில் உருவாக்குதல்' குறிக்கோளின் ஒரு அங்கமாகும். இது உள்ளூர் திறமைகளை வளர்ப்பதையும், உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான ஒரே இடமாக இந்தியாவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் இது இசைவானதாக இருக்கிறது.
இந்தியா முழுவதும் உள்ள வளர்ந்து வரும் விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞர்கள் டபிள்யூ.ஏ.எஃப்.எக்ஸ் வேவ்ஸ் வி.எஃப்.எக்ஸ் சவாலில் சேர்ந்து, வேகமாக வளர்ந்து வரும் வி.எஃப்.எக்ஸ் துறையில் அங்கீகாரம் பெறலாம். www.wafx.abai.avgc.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களுடன் பதிவு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போட்டி, திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக மட்டுமல்லாமல், தொழில்முறை வளர்ச்சிக்கு ஒரு முயற்சியாகவும், இந்தியாவின் சிறந்த வி.எஃப்.எக்ஸ் ஸ்டுடியோக்கள் மற்றும் வழிகாட்டிகளின் வலுவான வலையமைப்பில் சேரவும் வாய்ப்பளிக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு, wafx@abai.avgc.in, generalsecretary@abai.avgc.in, www.wafx.abai.avgc.in ஐ தொடர்பு கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2069381
***
(Release ID: 2069381)
TS/BR/RR
(Release ID: 2069461)
Visitor Counter : 10