குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத்தலைவர் மாளிகையில் கொனார்க் சக்கரங்களின் மாதிரிகள்

Posted On: 29 OCT 2024 7:45PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்திலும் அமிர்த தோட்டத்திலும் மணல் கற்களால் செய்யப்பட்ட கோனார்க் சக்கரங்களின் நான்கு பிரதிகள் நிறுவப்பட்டுள்ளன. கொனார்க் சக்கரங்கள் நிறுவப்படுவது பார்வையாளர்களிடையே நாட்டின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய கலாச்சார, வரலாற்றுக் அம்சங்களை அறிமுகப்படுத்த எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான கொனார்க் சூரியனார் கோயில், ஒடிசா கோயில் கட்டடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இது சூரியக் கடவுளைச் சுமந்து செல்லும் பிரம்மாண்டமான தேரின் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. கொனார்க் சக்கரங்கள் இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் சின்னங்களாகும்.

----

AD/PLM/KPG/DL




(Release ID: 2069365) Visitor Counter : 17