பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய கற்றல் வாரம் - ‘கர்மயோகி வாரத்தை’ அக்டோபர் 19 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

ஒவ்வொரு கர்ம யோகியும் குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு போட்டித் தன்மையுடைய கற்றலை மேற்கொள்ள வேண்டும்

அமைச்சகங்களும் துறைகளும் துறை சார்ந்த போட்டித்திறனை மேம்படுத்துவதற்கான பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு

Posted On: 18 OCT 2024 11:42AM by PIB Chennai

தேசிய கற்றல் வாரம் - ‘கர்மயோகி வாரத்தை’  அக்டோபர் 19 அன்று  காலை 10.30 மணி அளவில் புதுதில்லியில் உள்ள  டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

கர்மயோகி இயக்கம்  2020 செப்டம்பரில்  தொடங்கப்பட்டு, அப்போது முதல் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டிவருகிறது. இது உலகளாவிய பார்வையில் இந்திய நெறிமுறைகளில் வேரூன்றி உள்ள  எதிர்காலத்திற்கு ஏற்ற குடிமைப்பணிக்கு வகை செய்கிறது.

தேசிய கற்றல் வாரம், தனிநபர்களுக்கு புதிய உத்வேகம்  அளிப்பதோடு, குடிமைப் பணியாளர்களுக்கு அமைப்பு ரீதியான திறன்  மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் மிகப் பெரிய நிகழ்ச்சியாகும்.  இந்த முன்முயற்சி கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கான  புதுப்பிக்கப்பட்ட உத்தரவாதத்தை அளிக்கும். “ஒற்றை அரசு” செய்தியை உருவாக்கி, அனைவரையும் தேசிய குறிக்கோளுக்கு ஏற்ப, வாழ்நாள் முழுவதும் கற்பதை ஊக்குவிப்பதே தேசிய கற்றல் வாரத்தின் நோக்கம்.

தேசிய கற்றல் வாரம் என்பது, தனிநபர் பங்கேற்பாளர்கள், அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களால்  பல்வேறு வடிவிலான கற்றலில் ஈடுபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இந்த தேசிய கற்றல் வாரத்தின் போது ஒவ்வொரு கர்மயோகியும், போட்டியுடன் இணைந்த கற்றலில் குறைந்தது நான்கு மணி நேரம் ஈடுபடுவது என்ற இலக்கை அடைய உறுதியேற்க வேண்டும். பங்கேற்பாளர்கள் ஐகாட் (iGOT)  தளத்தில் தனிநபர் பங்கேற்பு சார்ந்த தொகுதி, நிபுணர்களால் நடத்தப்படும் இணையவழிக் கருத்தரங்குகள் ஆகிய இரண்டு முறைகள் வாயிலாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு போட்டியிட வேண்டும். இந்த வாரத்தில் பிரபல சொற்பொழிவாளர்கள் தாங்கள் நிபுணத்துவம் பெற்ற அம்சங்களில் உரையாற்றுவதுடன், மக்கள் நலன் சார்ந்த சேவைகள், சிறந்த முறையில் அவர்களை சென்றடைய பாடுபடுவதற்கு உதவலாம். இந்த வாரத்தின் போது அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்கள், அந்தந்த துறை சார்ந்த போட்டித் திறனை மேம்படுத்தும் விதமாக கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்யும்.

***

(Release ID: 2065991)

MM/KPG/KR



(Release ID: 2066029) Visitor Counter : 29