தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தனியார் பண்பலை வானொலி 3-ம் கட்ட அலைவரிசைகளுக்கான 3-வது தொகுப்பு மின்னணு ஏலத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
Posted On:
15 OCT 2024 4:49PM by PIB Chennai
இந்தியாவில் இதுவரை வானொலி சேவை கிடைக்கப் பெறாத 234 புதிய நகரங்களில் 730 தனியார் பண்பலை அலைவரிசைகளைத் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை சாத்தியமான ஏலதாரர்களிடமிருந்து பெறுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தனியார் பண்பலை வானொலி 3-ம் கட்ட அலைவரிசைகளுக்கான 3-வது தொகுப்புக்கு இந்த மின்னணு ஏலம் கோரப்படுகிறது.
இந்த நகரங்களில் பண்பலை அலைவரிசைகளுக்கான வருடாந்திர உரிமக் கட்டணம், ஜிஎஸ்டி தவிர்த்த மொத்த வருவாயில் 4% அளவிற்கு வசூலிக்கப்படும். இந்த நகரங்களில், அலைவரிசை ஏலத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட விலை, 2022-ம் ஆண்டு ட்ராய் அமைப்பு பரிந்துரைத்த விலை அடிப்படையில் இருக்கும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 18.11.2024 ஆகும்.
முழுமையான அறிவிப்பு மற்றும் 3-ம் கட்ட பண்பலை கொள்கை வழிகாட்டுதல்கள், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வலைதளத்தில் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2065001
-----
MM/KPG/DL
(Release ID: 2065041)
Visitor Counter : 60