உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளுடன் 2024, அக்டோபர் 15 அன்று புதுதில்லியில் உரையாடுகிறார்
Posted On:
14 OCT 2024 4:09PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளுடன் 2024, அக்டோபர் 15 அன்று புதுதில்லியில் உரையாடுகிறார். இந்த உரையாடலின் போது பயிற்சி அதிகாரிகள் தங்களது பயிற்சி அனுபவங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சருடன் பகிர்ந்து கொள்வார்கள்.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற திரு நரேந்திர மோடியின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் இளம் காவல் துறை அதிகாரிகள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
2023-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 54 பெண்கள் உள்ளிட்ட 188 இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகள் அடிப்படை பயிற்சியின் முதல் கட்டத்தை நிறைவு செய்துள்ளனர். தில்லியில் பல்வேறு மத்திய ஆயுதக் காவல் படையினர் மற்றும் மத்திய காவல் அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளும் இரண்டு வார கால பயிற்சிக்குப் பிறகு ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் மாவட்டத்தில் 29 வார காலம் நேரடி பயிற்சி பெறுவார்கள்.
-----
IR/KPG/KR/DL
(Release ID: 2064731)