பிரதமர் அலுவலகம்
குவைத் பட்டத்து இளவரசருடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
22 SEP 2024 11:36PM by PIB Chennai
நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வின் இடையே, குவைத் பட்டத்து இளவரசர் மேதகு திரு ஷேக் சபா காலித் அல்-ஹமாத் அல்-முபாரக் அல்-சபாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்து பேசினார் . பிரதமருக்கும் பட்டத்து இளவரசருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.
குவைத்துடனான இருதரப்பு உறவுகளுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகள் மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்புகளை இரு தலைவர்களும் நினைவு கூர்ந்தனர். எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்புத் தேவைகளை இரு நாடுகளும் ஆதரித்து வருவது குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர். இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தவும், பன்முகப்படுத்தவும் தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தினர். நாட்டின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் குழுவான குவைத்தில் உள்ள இந்திய சமுதாயத்தினரின் நல்வாழ்வை உறுதி செய்ததற்காக பட்டத்து இளவரசருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இந்தியா மற்றும் குவைத் இடையேயான இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*****************
BR/KV
(Release ID: 2064500)
Visitor Counter : 29
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam