ஆயுஷ்
புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் 8-வது ஆண்டு நிறுவன தின விழாவில் குடியரசுத் தலைவர் இன்று பங்கேற்றார்
Posted On:
09 OCT 2024 5:20PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் 8-வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டத்தில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். தில்லி துணை நிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஆயுஷ் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் அகில இந்திய ஆயுர்வே நிறுவனத்தின் உயர் ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், "ஆயுர்வேதம் உலகின் பழமையான, முழுமையான மருத்துவ முறைகளில் ஒன்றாகும். இது மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையில் நல்லிணக்கத்தை நிறுவுவதில் கவனம் செலுத்துகிறது. ஆயுர்வேத மருத்துவ முறை நமது பாரம்பரியம் என்றும் ஆயுஷ் அமைச்சகம் இந்த பாரம்பரியத்தை ஒரு உண்மையான மருத்துவ முறையாக நிறுவும் பணியை செய்து வருகிறது என்றும் கூறினார்.
தில்லியின் துணை நிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா பேசியபோது, 2014-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் புதிய நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப் ராவ் கூறுகையில், "அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் 10 புதிய ஆயுர்வேத நிறுவனங்கள் திறக்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார் என்று குறிப்பிட்டார்.
ஆயுர்வேதம் மிகவும் பழமையான மருத்துவ முறையாகும், மேலும் இது மிக விரைவாக உலகில் பிரபலமடைந்து வருகிறது. கிராமப்புறங்களுக்கு உண்மையான மற்றும் குறைந்த விலையில் ஆயுர்வேத மருந்துகளை வழங்குவதற்காக ஆயுஷ் அமைச்சகம் "ஆயுஷ் மருந்தக மையத்தை" தொடங்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
கடந்த ஏழு ஆண்டுகளில், அகில இந்திய ஆயுர்வேத நிறுவுனம் பாரம்பரிய மருத்துவத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டை முன்னேற்றுவதில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை குறித்துள்ளது. 44 சிறப்பு மருத்துவமனைகள் மூலம் 27 இலட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சையை வழங்கியுள்ளது, இது நாடு முழுவதும் உயர்தர ஆயுர்வேத சுகாதாரத்தை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2063551
***
IR/RS/DL
(Release ID: 2063608)
Visitor Counter : 38