நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், இரு நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு பாதுகாப்பை தொடர்ந்து வழங்குகிறது

Posted On: 07 OCT 2024 9:57AM by PIB Chennai

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே, அந்நாட்டின் அபுதாபியில் கடந்த  பிப்ரவரி 13 அன்று கையெழுத்தான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் ஆகஸ்ட் 31-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.  ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்த புதிய இருதரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்துவதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே, 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கையெழுத்திடப்பட்ட முந்தைய இருதரப்பு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம்  செப்டம்பர் 12 அன்று காலாவதியானது.

2000-மாவது ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த ஜூன் மாதம் வரை சுமார் 19 பில்லியன் டாலர் ஒட்டு மொத்த முதலீட்டுடன், இந்தியாவில் பெறப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) 3% பங்கைக் கொண்ட ஏழாவது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் ஆகும். 2000-மாவது ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் 15.26 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் இந்தியா 5சதவீதத்தை செய்துள்ளது. இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான ஒப்பந்தம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் மத்தியஸ்தம் மூலம் தகராறு தீர்வுக்கான ஒரு சுதந்திரமான மன்றத்தை வழங்குகிறது. எவ்வாறாயினும், முதலீட்டாளர் மற்றும் முதலீட்டு பாதுகாப்பை வழங்கும் அதே வேளையில், ஒழுங்குபடுத்துவதற்கான மாநிலத்தின் உரிமையைப் பொறுத்தவரை சமநிலை பராமரிக்கப்படுகிறது, இதன் மூலம் போதுமான கொள்கை இடத்தை அது வழங்குகிறது.

இந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதும், அதை அமல்படுத்துவதும், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், மேலும் வலுவான மற்றும் நெகிழ்திறன் கொண்ட முதலீட்டுச் சூழலை உருவாக்குவதிலும் இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டுள்ள உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இந்த ஒப்பந்தம் இருதரப்பு முதலீடுகளை அதிகரிக்கவும், இரு நாடுகளிலும் உள்ள வர்த்தகங்கள் மற்றும் பொருளாதாரங்களுக்கு பயனளிக்கவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான 2024-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் சில முக்கிய அம்சங்கள்: -

நீதி மறுக்கப்படாமலும், உரிய செயல்முறையின் அடிப்படை மீறல் இல்லாமலும், இலக்கு வைக்கப்பட்ட பாகுபாடு இல்லாமலும், வெளிப்படையாக துஷ்பிரயோகம் அல்லது தன்னிச்சையாக நடத்தப்படாமலும் இருக்க வேண்டிய கடமையுடன் முதலீட்டை நடத்துதல்

வரிவிதிப்பு, உள்ளாட்சி, கொள்முதல், மானியங்கள் மற்றும் கட்டாய உரிமம் போன்ற நடவடிக்கைகளுக்கு நோக்கம் வகுக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்-மாநில தகராறு தீர்வு மத்தியஸ்தம் மூலம் உள்ளூர் தீர்வுகளை 3 ஆண்டுகளுக்கு கட்டாயமாக மேற்கொள்ளுதல்

பொது மற்றும் பாதுகாப்பு விதிவிலக்குகள்

மாநிலத்திற்கு ஒழுங்குபடுத்தும் உரிமை

முதலீடுகள் ஊழல், மோசடி போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால் முதலீட்டாளர் உரிமை கோர முடியாது.

இந்த ஒப்பந்தம் முதலீடுகள் அபகரிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கும், வெளிப்படைத்தன்மை, இடமாற்றம் மற்றும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் வகை செய்கிறது.

***

(Release ID: 2062692)
PKV/RR/KR



(Release ID: 2062718) Visitor Counter : 19