பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிர மாநிலம் வாஷிமில் வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
05 OCT 2024 3:49PM by PIB Chennai
மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, மாநில முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக உறுப்பினர்களான திரு சிவராஜ் சிங் சவுகான், திரு ராஜீவ் ரஞ்சன் சிங் அவர்களே, மகாராஷ்டிர துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், திரு அஜித் பவார் அவர்களே, மத்திய, மாநில அரசுகளின் இதர அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தொலைதூரத்திலிருந்து வந்துள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே, நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள விவசாய சகோதர சகோதரிகளே!
நவராத்திரியின் இந்தப் புனிதமான காலகட்டத்தில், பிரதமரின் விவசாயிகள் வெகுமதி நிதியின் 18-வது தவணையை வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று, நாடு முழுவதும் 9.5 கோடி விவசாயிகளின் கணக்குகளில் 20,000 கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் இரட்டை என்ஜின் அரசு இங்குள்ள விவசாயிகளுக்கு இரட்டை நன்மைகளை வழங்குகிறது. மகாராஷ்டிராவில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நமோ ஷேத்கரி மகாசன்மன் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 1,900 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை பராமரிப்பு, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் தொடர்பான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களும் இன்று பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் லட்லி பெஹ்னா யோஜனாவின் பயனாளிகளுக்கு உதவி வழங்கும் பெருமை எனக்கு கிடைத்துள்ளது. மகாராஷ்டிராவின் சகோதர சகோதரிகளுக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று, எங்கள் அரசின் ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு கொள்கையும் 'வளர்ந்த இந்தியாவிற்கு’ அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 'வளர்ந்த பாரதத்திற்கான’ வலுவான அடித்தளம் நமது விவசாயிகள். விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று, 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. மேலும், வேளாண் தொடர்பான பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இவை வேளாண் பொருட்களின் சேமிப்பு, பதப்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்கான திறனை மேம்படுத்தும். இந்த முயற்சிகள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும்.
வளர்ந்த மகாராஷ்டிரா மற்றும் வளர்ந்த இந்தியா என்ற கனவை நாம் ஒன்றாக இணைந்து நிறைவேற்றுவோம். இந்த நம்பிக்கையுடன், நமது விவசாய நண்பர்களுக்கும், பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த எனது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2062360
***************
BR/KV
(Release ID: 2062600)
Visitor Counter : 36
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam