மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav g20-india-2023

நோக்க ஆவணத்தில் கையெழுத்திட்டதன் மூலம் சர்வதேச எரிசக்தி திறன் மையத்தில் சேர இந்தியாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 03 OCT 2024 8:25PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 'நோக்க ஆவணத்தில் ' கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா 'எரிசக்தி திறன் மையத்தில்' இணைவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் எரிசக்தி திறனை ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய தளமான சர்வதேச எரிசக்தி திறன் மையத்தில் இந்தியா சேரும். இந்த நடவடிக்கை நிலையான வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது மற்றும் பசுமை வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான அதன் முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது.

இந்த மையம் அறிவு, சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ள அரசுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது. இந்த மையத்தில் இணைவதன் மூலம், வல்லுநர்கள் மற்றும் வளங்களின் பரந்த வலையமைப்பிற்கான அணுகலை இந்தியா பெறும், இது அதன் உள்நாட்டு எரிசக்தி திறன் முன்முயற்சிகளை மேம்படுத்த உதவும். ஜூலை 2024 நிலவரப்படி, பதினாறு நாடுகள் (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, டென்மார்க், ஐரோப்பிய ஆணையம், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கொரியா, லக்சம்பர்க், ரஷ்யா, சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும் யுனைடெட் கிங்டம்) மையத்தில் இணைந்துள்ளன.

இந்த மையத்தின் உறுப்பினர் என்ற முறையில், மற்ற உறுப்பு நாடுகளுடன் ஒத்துழைப்பு, தனது சொந்த நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளில் இருந்து கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் மூலம் இந்தியா பயனடையும். எரிசக்தி திறன் கொண்ட தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கும் நாடு பங்களிக்கும்.

இந்த மையத்தை செயல்படுத்தும் அமைப்பாக இந்தியாவின் சார்பில் எரிசக்தி திறன் மேம்பாட்டு அமைப்பு (பி.இ.இ) நியமிக்கப்பட்டுள்ளது. மையத்தின் நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்கேற்பை எளிதாக்குவதிலும், இந்தியாவின் பங்களிப்பு அதன் தேசிய எரிசக்தி திறன் இலக்குகளுடன் ஒத்துப்போவதை உறுதி செய்வதிலும் பி.இ.இ முக்கிய பங்கு வகிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061655

***

(Release ID: 2061655)

BR/RR/KR



(Release ID: 2061868) Visitor Counter : 6