தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
குவஹாத்தியில் 04.10.2024 அன்று வடகிழக்கு மாநிலங்களுடன் 6-வது பிராந்திய கூட்டம்: மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே பங்கேற்பு
Posted On:
03 OCT 2024 1:29PM by PIB Chennai
அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், மேகாலயா, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் பிராந்திய கூட்டம் 04.10.2024 (வெள்ளிக்கிழமை) அன்று குவஹாத்தியில் நடைபெறும்.
இக்கூட்டம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே தலைமையில் நடைபெறும்.
தொழிலாளர் குறியீடுகளின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு வகுத்த வரைவு விதிகளில் ஒத்திசைவு, வேலைவாய்ப்பு தரவு சேகரிப்பு மற்றும் பகிர்வு தொடர்பான பிரச்சனைகள், மத்திய பட்ஜெட் 2024-25-ல் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் உள்ளீடுகள், 'ஒரே இடத்தில் தீர்வாக' இ-ஷ்ரம் போர்ட்டலை நிறுவுதல் உள்ளிட்ட முக்கிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பின் பலன்கள் எளிதாக சென்றடைதல், மத்திய அரசின் பல்வேறு நலதிட்டங்களை வங்கி ஊழியர்களுக்கு விரிவுபடுத்துதல், வேலைவாய்ப்பு அலுவலகங்களை மேம்படுத்துதல் போன்றவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061450
-----------
LKS/RS/KR
(Release ID: 2061511)
Visitor Counter : 39