பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாலஸ்தீன அதிபரை பிரதமர் சந்தித்தார்

Posted On: 22 SEP 2024 11:45PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி 22 செப்டம்பர் 2024 அன்று நியூயார்க்கில் நடைபெற்ற எதிர்கால உச்சிமாநாட்டின் இடையே, பாலஸ்தீன அதிபர்  மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார்.

காசாவில் கட்டவிழ்ந்து வரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் பிராந்தியத்தில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய பிரதமர், மனிதாபிமான உதவிகளை தொடர்வது உட்பட பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா அசைக்க முடியாத ஆதரவை வழங்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினையில் காலங்காலமாக நிரூபிக்கப்பட்டு வரும் கொள்கை ரீதியான இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், போர் நிறுத்தம், பிணைக்கைதிகளை விடுவித்தல், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்புதல் ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்தார். இரண்டு நாடுகள் தீர்வு மட்டுமே பிராந்தியத்தில் நீடித்த அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் அளிக்கும் என்று அவர் வலியுறுத்தினார். பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை நினைவுகூர்ந்த பிரதமர், ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் உறுப்பினர் ஆவதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.


ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு இந்தியா அளிக்கும் ஆதரவு, கல்வி, சுகாதாரம் மற்றும் இதர திறன் மேம்பாட்டு முயற்சிகளில் பாலஸ்தீனத்திற்கு தொடர்ந்து வழங்கப்படும் உதவி மற்றும் ஆதரவு உள்ளிட்ட இந்தியா-பாலஸ்தீன இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர். இந்தியா-பாலஸ்தீனம் இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்த இரு தலைவர்களும் உறுதிபூண்டனர்.

******

PKV/DL
 



(Release ID: 2061076) Visitor Counter : 12