தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
"இந்தியாவில் படைப்பாற்றலை மேம்படுத்தும் சவால் மூலம் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள்"- மனதின் குரல் நிகழ்ச்சியின் 114-வது பதிப்பில் பிரதமர் ஊக்குவித்துள்ளார்
Posted On:
29 SEP 2024 2:41PM by PIB Chennai
மனதின் குரல் நிகழ்ச்சியின் 114-வது பதிப்பில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி , வேகமாக மாறிவரும் வேலைவாய்ப்புகள், கேமிங், திரைப்படத் தயாரிப்பு போன்ற படைப்பாற்றல் துறைகளில் வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்துக் கூறினார். இந்தியாவின் படைப்பாற்றல் திறமைகளின் அபரிமிதமான ஆற்றலை சுட்டிக் காட்டிய பிரதமர், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்தியாவில் படைப்பாற்றலை மேம்படுத்துதல் என்ற கருப்பொருளின் கீழ் 25 சவால்களில் படைப்பாளிகள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
- தமது உரையில், வேலை வாய்ப்புச் சந்தையை மறுவடிவமைத்து வரும் வளர்ந்து வரும் துறைகளை எடுத்துரைத்தார், இந்த மாறிவரும் காலங்களில், வேலைகளின் தன்மை மாறி வருகிறது என்றும் கேமிங், அனிமேஷன், ரீல் தயாரித்தல், திரைப்படம் தயாரித்தல் அல்லது சுவரொட்டி தயாரித்தல் போன்ற புதிய துறைகள் உருவாகி வருகின்றன என்றும் அவர் கூறினார். இந்த திறமைகளில் ஏதேனும் ஒன்றில் உங்களால் சிறப்பாக செயல்பட முடிந்தால், உங்கள் திறமைக்கு மிகப் பெரிய தளம் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார். இசைக்குழுக்கள், சமூக வானொலி ஆர்வலர்கள், படைப்பாற்றல் வல்லுநர்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதை அவர் குறிப்பிட்டார்.
இந்த திறனைப் பயன்படுத்துவதற்கும் வளர்ப்பதற்கும், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இசை, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறமை மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 25 சவால்களைத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். படைப்பாளிகள் வேவ்ஸ்இந்தியா என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். நாட்டில் உள்ள படைப்பாளிகள் இதில் பங்கேற்பதை உறுதி செய்து அவர்களின் படைப்பாற்றலை வெளிக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்வதாகப் பிரதமர் கூறினார்.
2024 ஆகஸ்ட் 22 அன்று, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ், புதுதில்லியில் கிரியேட் இன் இந்தியா சேலஞ்ச் - சீசன் ஒன்றை அறிமுகம் செய்தார். இந்த சவால்கள் வரவிருக்கும் உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டிற்கு (WAVES) முன்னோடியாக செயல்படும்.
*****
PLM/ KV
(Release ID: 2060107)
Visitor Counter : 37
Read this release in:
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Gujarati
,
Malayalam