பிரதமர் அலுவலகம்
டெலாவரில் உள்ள வில்மிங்டன் நகரில் அமெரிக்க அதிபரை பிரதமர் சந்தித்தார்
Posted On:
22 SEP 2024 2:02AM by PIB Chennai
டெலாவரில் நடைபெற்ற குவாட் உச்சிமாநாட்டின் இடையே, அமெரிக்க அதிபர் திரு. ஜோசப் பைடனை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். வில்மிங்டனில் உள்ள தமது இல்லத்தில் இந்த சந்திப்பை அதிபர் பைடன் நடத்தினார்.
இந்திய-அமெரிக்க கூட்டாண்மைக்கு உத்வேகம் அளிப்பதில் அதிபர் பைடன் அளித்த இணையற்ற பங்களிப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். ஜூன் 2023-ல் தாம் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டதையும், 2023 செப்டம்பரில் ஜி-20 தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் பைடன் இந்தியாவுக்கு வருகை தந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தப் பயணங்கள் இந்திய-அமெரிக்க கூட்டாண்மைக்கு அதிக வேகத்தையும், ஆழத்தையும் அளித்துள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள், நலன்களின் ஒருங்கிணைப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான துடிப்பான உறவுகள் ஆகியவற்றால் உந்தப்பட்டு, மனித முயற்சியின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய விரிவான உலகளாவிய கூட்டாண்மையை இந்தியாவும் அமெரிக்காவும் இன்று அனுபவித்து வருவதாக பிரதமர் வலியுறுத்தினார்.
இரு தலைவர்களும் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர், மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பால், உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையேயான மனித முயற்சிகளின் அனைத்து பகுதிகளிலும் இந்த உறவின் முக்கியத்துவம் குறித்த நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர்..
*****
PKV/ KV/DL
(Release ID: 2059166)
Visitor Counter : 38
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam