பிரதமர் அலுவலகம்
உலக காண்டாமிருக தினத்தை முன்னிட்டு காண்டாமிருக பாதுகாப்பில் அர்ப்பணிப்பை பிரதமர் உறுதிப்படுத்தினார்
காண்டாமிருக பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டு
प्रविष्टि तिथि:
22 SEP 2024 11:12AM by PIB Chennai
உலக காண்டாமிருக தினத்தை முன்னிட்டு காண்டாமிருகங்களை பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் தாயகமான அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவைப் பார்வையிடுமாறு குடிமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"உலக காண்டாமிருக தினமான இன்று, நமது கிரகத்தின் மிகவும் புகழ்பெற்ற உயிரினங்களில் ஒன்றான காண்டாமிருகங்களைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். கடந்த பல ஆண்டுகளாக காண்டாமிருக பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் இருப்பது மிகவும் பெருமைக்குரியது. அசாமில் உள்ள காசிரங்காவுக்கு நான் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்வதுடன், அங்கு சென்று பார்வையிடுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’’..
*****
PKV/ KV/DL
(रिलीज़ आईडी: 2059114)
आगंतुक पटल : 69
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam