பிரதமர் அலுவலகம்
அமெரிக்கப் பயணத்தையொட்டி பிரதமரின் புறப்பாட்டு அறிக்கை
प्रविष्टि तिथि:
21 SEP 2024 6:12AM by PIB Chennai
அதிபர் பைடன் தமது சொந்த ஊரான வில்மிங்டனில் நடத்தும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், நியூயார்க்கில் உள்ள ஐநா பொதுச் சபையில் எதிர்கால உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காகவும் இன்று நான் மூன்று நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்படுகிறேன்.
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் எனது நண்பர்களான அதிபர் பைடன், பிரதமர் அல்பானீஸ், பிரதமர் கிஷிடா ஆகியோருடனான சந்திப்புகளை நான் எதிர்நோக்குகிறேன். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமைக்காக பணியாற்றுவதற்கு ஒரே எண்ணம் கொண்ட நாடுகளின் முக்கிய அமைப்பாக இந்த மன்றம் உருவெடுத்துள்ளது.
அதிபர் பைடனுடனான எனது சந்திப்பு, நமது மக்களின் நலனுக்காகவும், உலக நன்மைக்காகவும் இந்தியா-அமெரிக்கா விரிவான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த புதிய பாதைகளை மதிப்பாய்வு செய்து அடையாளம் காண அனுமதிக்கும்.
உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான தனித்துவமான கூட்டாண்மைக்கு எழுச்சியூட்டும் முக்கிய பங்குதாரர்களான இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் முக்கியமான அமெரிக்க வணிகத் தலைவர்களுடன் உரையாடலில் ஈடுபட ஆவலுடன் காத்திருக்கிறேன்.
எதிர்கால உச்சி மாநாடு என்பது மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான பாதையை உலக சமூகம் பட்டியலிட ஒரு வாய்ப்பாகும். மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கினர் அமைதியான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தில், அவர்களின் பங்குகள் உலகின் மிக உயர்ந்தவை என்பதால் அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
----
PKV/KV
(रिलीज़ आईडी: 2059010)
आगंतुक पटल : 95
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam