தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையே சேவை இயக்கத்தின் போது 'தாயின் பெயரில் மரம்' நடும் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது

Posted On: 18 SEP 2024 9:21AM by PIB Chennai

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  பிரதமர் திரு நரேந்திர மோடியால் 05.06.2024 அன்று 'தாயின் பெயரில் மரம்' பிரச்சாரம் தொடங்கப்பட்டது. நமது  பூமியை சிறந்ததாக மாற்றுவதில் பங்களிக்க வேண்டும் என்ற அவரது தெளிவான அழைப்பாலும், இயற்கை அன்னையைப் பாதுகாப்பதற்கும் நிலையான வாழ்க்கைமுறை தேர்வுகளை மேற்கொள்வதற்கும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகஸ்ட் 2 வது வாரத்திலிருந்து மரம் நடும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள நகர மற்றும் கிராமிய பிரதேசங்களில் தனது கள அலுவலகங்களுடன் இணைந்து  இதுவரை சுமார் 7000 மரக்கன்றுகளை  அமைச்சகம் நட்டுள்ளது. செப்டம்பர் 17-  அக்டோபர் 1, 2024 வரை நடைபெறும் இருவார பிரச்சாரத்தின் போது, தாய் பூமியைப் பாதுகாப்பதன் அடையாளமாக மரம் நடும் இயக்கத்தை விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

BR/KR

***

 


(Release ID: 2055881) Visitor Counter : 60