பிரதமர் அலுவலகம்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
Posted On:
17 SEP 2024 10:48PM by PIB Chennai
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை 2024-ஐ வென்ற ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர்களின் செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டிய திரு மோடி, இந்த அணி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது என்று கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி 2024-ஐ வென்ற வியத்தகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்!
அவர்களின் குறிப்பிடத்தக்க செயல்திறன், அசைக்க முடியாத உணர்வு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளன.
***
(Release ID: 2055852)
(Release ID: 2055879)
Visitor Counter : 45