விவசாயத்துறை அமைச்சகம்
பிரதமரின் குறு, சிறு விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் ஐந்து வெற்றிகரமான ஆண்டுகள்
Posted On:
09 SEP 2024 4:41PM by PIB Chennai
இந்த முதியோர் ஓய்வூதிய திட்டம் ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குறு, சிறு விவசாயிகளுக்கு 60 வயதை எட்டிய பிறகு மாதந்தோறும் ரூ.3,000 நிலையான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தகுதி பெற, விவசாயிகள் தங்கள் வேலை ஆண்டுகளில் ஓய்வூதிய நிதிக்கு மாதாந்திர பங்களிப்பை வழங்குகிறார்கள், அதற்கு இணையான மத்திய அரசின் பங்களிப்புகளும் உள்ளன.
வயதான காலத்தில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு சூழலை வழங்குவதற்கான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
பிரதமரின் குறு, சிறு விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் வெற்றிகரமான அமலாக்கம்
இத்திட்டத்தின் கீழ், குறு, சிறு விவசாயிகள் ஓய்வூதிய நிதிக்கு மாதாந்திர சந்தா செலுத்துவதன் மூலம் பதிவு செய்யலாம். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட விவசாயிகள் 60 வயது வரை, மாதத்திற்கு ரூ.55 முதல் ரூ.200 வரை பங்களிப்பு செய்ய வேண்டும்.
60 வயதை எட்டியதும், பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறுவார்கள். ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கிறது, மேலும் பயனாளிகள் பதிவு பொது சேவை மையங்கள் (சி.எஸ்.சி) மற்றும் மாநில அரசுகள் மூலம் எளிதாக்கப்படுகிறது.
2 ஹெக்டேர் வரை சாகுபடி செய்யக்கூடிய நிலங்களைக் கொண்ட மற்றும் 2019 ஆகஸ்ட் 1 நிலவரப்படி மாநிலயூனியன் பிரதேச நிலப் பதிவுகளில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளும் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள். 2024, ஆகஸ்ட் 6, நிலவரப்படி, மொத்தம் 23.38 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
மேலும், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் முறையே, 2.5 லட்சம், 2 லட்சம் மற்றும் 1.5 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். மிகப்பெரிய பதிவு இந்த மாநிலங்களில் வலுவான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது, இது விவசாயிகளுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதில் திட்டத்தின் அணுகல் மற்றும் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
இத்திட்டத்தின் கீழ் முக்கிய நன்மைகள்
குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் இத்திட்டத்தின் ஒவ்வொரு சந்தாதாரருக்கும், 60 வயதை எட்டும் போது மாதத்திற்கு ரூ .3000 குறைந்தபட்ச ஓய்வூதியம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது
குடும்ப ஓய்வூதியம் ஓய்வூதியம் பெறும் போது சந்தாதாரர் இறந்துவிட்டால், அவரது மனைவி சந்தாதாரர் பெற்ற தொகையில் 50% க்கு சமமான குடும்ப ஓய்வூதியத்திற்கு உரிமை பெறுவார், அதாவது மாதத்திற்கு ரூ .1500 குடும்ப ஓய்வூதியம். மனைவி ஏற்கனவே திட்டத்தின் பயனாளியாக இல்லாவிட்டால் மட்டுமே இது பொருந்தும். குடும்ப ஓய்வூதிய பலன் மனைவிக்கு பிரத்தியேகமாக உள்ளது.
பதிவு செய்யும் நேரத்தில் பயனாளி பின்வரும் தகவல்களை வழங்குவார்
● விவசாயி மனைவியின் பெயர் மற்றும் பிறந்த தேதி
● வங்கி கணக்கு எண்
● IFSC MICR குறியீடு
● மொபைல் எண்
● ஆதார் எண்
மாதாந்திர பங்களிப்புகள்
***
(Release ID: 2053183)
Visitor Counter : 88