சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சுகாதார அமைச்சகம் "இந்தியாவின் சுகாதார இயக்கவியல் (உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள்) 2022-23" ஐ வெளியிட்டது

Posted On: 09 SEP 2024 12:38PM by PIB Chennai

மத்திய சுகாதார செயலாளர் திரு அபூர்வா சந்திரா, "கிராமப்புற சுகாதார புள்ளிவிவரங்கள்" என்று முன்னர் அறியப்பட்ட ஆண்டு வெளியீடான, "இந்தியாவின் சுகாதார இயக்கவியல் (உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளம்) 2022-23" ஐ இன்று வெளியிட்டார். இந்த ஆவணம் 1992-ம் ஆண்டு முதல் வெளியிடப்படுகிறது.

தேசிய சுகாதார இயக்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த நம்பகமான மற்றும் உண்மையான தகவல்களின் ஆதாரமாக, இந்த ஆவணம் இருப்பதை எடுத்துரைத்த திரு அபூர்வ சந்திரா, "இந்த ஆண்டு வெளியீடு. தேசிய சுகாதார இயக்கத்திற்குள் மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு குறித்த மிகவும் தேவையான தகவல்களை வழங்கும் மதிப்புமிக்க ஆவணமாகும், இது கொள்கை வகுப்பதில் உதவிகரமாக உள்ளது, செயல்முறைகளை மேம்படுத்துகிறது மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதில் உதவுகிறது" என்று கூறினார். மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பில் கிடைக்கும் தன்மை மற்றும் குறைபாடுகள் குறித்து மாநிலங்கள் முழுவதும் உள்ள குறுக்குப் பகுப்பாய்வை இந்த ஆவணம் வழங்குகிறது என்று அவர் கூறினார். மாநிலங்களின் தேவைகள், அவற்றின் முன்னுரிமை பகுதிகள் மற்றும் கொள்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய  இயக்கங்களை உருவாக்க இந்தத் தரவு பெரிதும் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார். பல்வேறு அளவுருக்களில் மாநிலங்களின் செயல்திறனை ஒப்பிடுவதற்கும் சுகாதார புள்ளிவிவரங்கள் உதவுகின்றன என்று அவர் எடுத்துரைத்தார்.

சுகாதார செயல்பாட்டாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், தரவு சரியான நேரத்தில் பதிவேற்றப்பட்டு கவனமாக பகுப்பாய்வு செய்யப்படுவதை உறுதி செய்யவும், கருத்தரித்தல் மற்றும் குழந்தை ஆரோக்கியம் மற்றும் அமைச்சகத்தின் பிற இணையதளங்களுடன் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்தை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் மத்திய சுகாதார செயலாளர் சுட்டிக்காட்டினார்.

பின்னணி:

1992-ம் ஆண்டு முதல், இந்த வெளியீடு, சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள் குறித்த விரிவான ஆண்டு தரவை வழங்கியுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 வரை புதுப்பிப்புகளுடன். சுகாதாரத் துறையில் உள்ள பங்குதாரர்களுக்கு இந்த தரவு முக்கியமானது, ஏனெனில், இது நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பின் பயனுள்ள திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் மேலாண்மையை ஆதரிக்கிறது. சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்களின் தற்போதைய நிலை பற்றிய தெளிவான வரையறையை வழங்குவதன் மூலம், கிராமப்புற, நகர்ப்புற மற்றும் பழங்குடி பிராந்தியங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் இடைவெளிகளை அடையாளம் காண்பதற்கும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் இந்த வெளியீடு ஒரு அடித்தள கருவியாக செயல்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053070

*****

(Release ID: 2053070)

IR/KPG/KR



(Release ID: 2053083) Visitor Counter : 24