பிரதமர் அலுவலகம்
ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபே-வின் மனைவி திருமதி அகி அபே பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்
இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பை மீண்டும் உறுதி செய்தார்
प्रविष्टि तिथि:
06 SEP 2024 8:51PM by PIB Chennai
ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேயின் மனைவி திருமதி அகி அபே பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மறைந்த பிரதமர் ஷின்சோ அபேவுடன் தமக்கு ஏற்பட்ட நெருங்கிய தனிப்பட்ட நட்பை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, இந்தியா-ஜப்பான் நல்லுறவில் ஷின்சோ அபே-வின் வலுவான பங்களிப்பை எடுத்துரைத்தார்.
இந்தியாவுடன் திருமதி அகி அபே தொடர்ந்து கொண்டுள்ள நட்புக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது;
"திருமதி அபேவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே-வுடனான எனது நெருங்கிய தனிப்பட்ட நட்பை நினைவு கூர்ந்தேன். இந்தியா-ஜப்பான் உறவுகளில் ஷின்சோ அபே கொண்டிருந்த நம்பிக்கை நமக்கு நீடித்த பலத்தை அளிக்கும். இந்தியாவுடன் திருமதி அபேயின் தொடர்ச்சியான நட்புக்கு ஆழ்ந்த பாராட்டுக்கள்".
****
PLM/DL
(रिलीज़ आईडी: 2052847)
आगंतुक पटल : 67
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam