இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மாவட்ட இளையோர் மேம்பாட்டு அதிகாரிகளின் இரண்டு நாள் தேசிய மாநாடு - புதுதில்லியில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

Posted On: 04 SEP 2024 4:32PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, புதுதில்லியில் மாவட்ட இளைஞர் மேம்பாட்டு அதிகாரிகளின் இரண்டு நாள் தேசிய மாநாட்டை இன்று (04.09.2024) தொடங்கி வைத்தார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இளைஞர்களின் முக்கிய பங்கு குறித்த விவாதங்கள் இந்த நிகழ்வில் இடம்பெறுகின்றன. 

மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தமது தொடக்க உரையில், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர் சக்தியின் திறனைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தேசக் கட்டமைப்பில் இளைஞர்கள் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க அவர்களை ஊக்குவிப்பதில் மாவட்ட இளைஞர் மேம்பாட்டு அதிகாரிகள் முன்னின்று செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

இந்தியாவின் இளைஞர்கள் நமது மிகப்பெரிய பலம் எனவும் அவர்களின் ஆற்றல் ஒரு வளமான தேசத்தை உருவாக்குவதை நோக்கி செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அண்மையில் தொடங்கப்பட்ட மை பாரத் தளத்தின் சிறப்பு அம்சங்களையும் அவர் எடுத்துரைத்தார். 1.5 கோடிக்கும் அதிகமான இளம் தன்னார்வலர்கள் ஏற்கனவே இந்த தளத்தில் பதிவு செய்துள்ளதாகவும், டிசம்பர் 2024-க்குள் இந்த எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இளைய தலைமுறையினர் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை முன்னேற்றுவதற்கும் வளப்படுத்துவதற்கும் அர்ப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இளைஞர்கள் தொடர்பானவபல்வேறு கருப்பொருள்கள் குறித்து நாடு முழுவதிலுமிருந்து  வந்துள்ள இளைஞர் விவகாரங்கள் துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் கலந்துரையாடல் அமர்வுகளில் பங்கேற்றார்.

இந்த தேசிய மாநாடு இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரங்கள் துறையால் 2024 செப்டம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறுகிறது. சுகாதாரம், நகர்ப்புற நிர்வாகம், இணைய பாதுகாப்பு, தொழில்முனைவு, இளைஞர் பரிமாற்றம், அறிவியல்  உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து இளைஞர் மேம்பாட்டு அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

----

PLM/KPG/KR/DL



(Release ID: 2051825) Visitor Counter : 28