பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புருனே தாருஸ்ஸலாம் மற்றும் சிங்கப்பூர் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை (03-05 செப்டம்பர் 2024)

प्रविष्टि तिथि: 03 SEP 2024 7:32AM by PIB Chennai

இன்று, புருனே தாருஸ்ஸலாமுக்கு முதன்முறையாக இருதரப்பு பயணத்தை மேற்கொள்கிறேன். நமது ராஜதந்திர உறவுகளின் 40 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், நமது வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை புதிய உயரங்களுக்கு முன்னெடுத்துச் செல்வதற்காக  மதிப்பிற்குரிய சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா மற்றும் அரச குடும்பத்தின் பிற மதிப்புமிக்க உறுப்பினர்களுடனான எனது சந்திப்புகளை நான்  ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

புருனேயிலிருந்து செப்டம்பர் 4-ஆம் தேதி சிங்கப்பூர் செல்கிறேன். அதிபர் திரு தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் திரு லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் திரு லீ சியன் லூங் மற்றும் ஓய்வுபெற்ற மூத்த அமைச்சர் திரு கோ சோக் டோங் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பை நான் எதிர்நோக்கியுள்ளேன். சிங்கப்பூரின் துடிப்பான வர்த்தக சமூகத்தின் தலைவர்களையும் நான் சந்திக்க உள்ளேன்.

 

 

சிங்கப்பூருடனான நமது உத்திசார் கூட்டாண்மையை, குறிப்பாக மேம்பட்ட உற்பத்தி, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றின் புதிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஆழப்படுத்துவதற்கான எனது விவாதங்களை நான் எதிர்நோக்கியுள்ளேன்.

நமது கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வை  ஆகியவற்றில் இரு நாடுகளும் முக்கிய கூட்டாளிகளாக உள்ளன. எனது பயணங்கள் புருனே, சிங்கப்பூர் மற்றும் ஆசியான் மண்டலத்துடனான நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

BR/KR

***


(रिलीज़ आईडी: 2051144) आगंतुक पटल : 121
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam