ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில்நுட்ப ஜவுளித் துறையில் 4 புத்தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

Posted On: 27 AUG 2024 7:06PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள உத்யோக் பவனில் இன்று தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் 8-வது அதிகாரமளிக்கப்பட்ட திட்டக் குழு கூட்டத்திற்கு ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் தலைமை தாங்கினார். 'தொழில்நுட்ப ஜவுளித் துறையில் ஆர்வமுள்ள கண்டுபிடிப்பாளர்களிடையே ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவோருக்கான மானியம் (கிரேட்)' திட்டத்தின் கீழ், தலா 50 லட்சம் ரூபாய் மானியத்துடன் 4 புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்தக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

'தொழில்நுட்ப ஜவுளியில் கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் பொது வழிகாட்டுதல்களின்' கீழ், தொழில்நுட்ப ஜவுளித்துறையில் படிப்புகளை அறிமுகப்படுத்த 5 கல்வி நிறுவனங்களுக்கு சுமார் 20 கோடி ரூபாய் மானியம் வழங்கவும் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் திட்டங்கள் கூட்டுத்தொகை, நீடித்த ஜவுளி மற்றும் ஸ்மார்ட் ஜவுளி ஆகிய முக்கிய உத்தி சார்ந்த தளங்களில் கவனம் செலுத்துகின்றன. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் புதிய பி.டெக் படிப்புகளை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளதோடு புவி சார்ந்த ஜவுளி, புவி சார்ந்த சிந்தடிக்ஸ், கலவைகள், கட்டுமான கட்டமைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஜவுளி பயன்பாடுகள் போன்றவையும் இதில் அடங்கும்.

***

LKS/AG/DL


(Release ID: 2049202) Visitor Counter : 78