பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

அனுபவ் விருதுகள் 2024 ஐ மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாளை புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் வழங்குகிறார்

Posted On: 27 AUG 2024 3:13PM by PIB Chennai

இந்தியப் பிரதமரின் உத்தரவின் பேரில், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை 2015  மார்ச் 'அனுபவ்' என்ற ஆன்லைன் தளத்தை அறிமுகப்படுத்தியது. ஓய்வு பெற்ற / ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்கள் சேவைக் காலத்தில் செய்த குறிப்பிடத்தக்க சாதனைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும்.

 

2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 2024 ஆகஸ்ட் 28, அன்று வரை, 7வது அனுபவ் விருதுகள் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 விழாக்களில் 54 அனுபவ் விருதுகளும், 09 ஜூரி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த ஆண்டு, 22 அமைச்சகங்கள் / துறைகளின் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் 5 அனுபவ் விருதுகள் மற்றும் 10 ஜூரி சான்றிதழ்களை பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணையமைச்சர்டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்குவார். மொத்தம் 15 விருது பெறுவோர்களில் 33% பெண் ஊழியர்கள் ஆவர். இது 'அனுபவ்' விருது வரலாற்றில் மிகவும் அதிகமாகும். இது நிர்வாகத்தில் அவர்களின் வளர்ந்து வரும் பங்களிப்பைக் குறிக்கிறது. விருது பெற்ற 15 பேரின் தொழில்முறை சாதனைகளைக் கொண்டாடவும், சிறப்பிக்கவும் குறும்படம் மற்றும் மேற்கோள் கையேட்டையும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறை வெளியிட உள்ளது.

 

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை55வதுஓய்வுக்கு முந்தைய ஆலோசனை (PRC) கலந்தாய்வை 2024 ஆகஸ்ட் 28 அன்று விஞ்ஞான் பவனின் மண்டபத்தில் பணியாளர், மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையில் நடத்த உள்ளது.

நல்லாட்சியின் ஒரு பகுதியாக, ஓய்வு பெறவிருக்கும் அதிகாரிகளுக்கு ஓய்வு பெறும் செயல்பாட்டில் வசதி செய்வதற்காக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை நாடு முழுவதும் ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை (PRC) செயலமர்வுகளை நடத்தி வருகிறது. மத்திய அரசின் ஓய்வு பெறும் ஊழியர்களின் நலனுக்காக நடத்தப்படும் இந்த பயிலரங்கு, ஓய்வூதியதாரர்களின் 'வாழ்க்கையை எளிதாக்கும்' திசையில் ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும். இந்த பயிலரங்கில், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதிய செயல்முறை தொடர்பான பொருத்தமான தகவல்கள் வழங்கப்படும்.

 

ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு சுமூகமான மாற்றத்தை எளிதாக்கும் வகையில், பவிஷ்யா தளம்,ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்கள் தளம்,ஓய்வூதிய பலன்கள், குடும்ப ஓய்வூதியம், விதிகள், வருமான வரி விதிகள், அனுபவ், டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ், முதலீட்டு வாய்ப்புகள் போன்றவற்றில் பல்வேறு அமர்வுகள் நடத்தப்படும்.இந்த அமர்வுகள் அனைத்தும், ஓய்வு பெறுபவர்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறை மற்றும் ஓய்வுக்கு முன் நிரப்ப வேண்டிய படிவங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய தகவல்களை வழங்கவும் தொகுக்கப்பட்டுள்ளன.

 

பல்வேறு முதலீட்டு முறைகள், அவற்றின் பலன்கள் மற்றும் திட்டமிடல் குறித்த விரிவான அமர்வு ஏற்பாடு செய்யப்படும், இதன் மூலம் ஓய்வு பெறுபவர்கள் தங்கள் ஓய்வூதிய நிதியை சரியான நேரத்தில் முதலீடு செய்ய திட்டமிட முடியும். CGHS அமைப்பு, CGHS போர்ட்டல், வழங்கப்படும் வசதிகள் மற்றும் CGHS பலன்களைப் பெறுவதற்கான பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஆகியவை குறித்த விரிவான அமர்வும் இருக்கும்.

 

ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை கலந்தாய்வின் போது "வங்கிகளின் கண்காட்சி" ஏற்பாடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, இதில் அனைத்து 18 ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளும் பங்கேற்கும். ஓய்வூதியம் பெறுவோர் தொடர்பான அனைத்து வங்கிச் சேவைகளும் பங்கேற்பாளர்களுக்கு கிடைக்கும். ஓய்வூதியக் கணக்கைத் திறப்பது குறித்தும், ஓய்வூதிய நிதியை அவர்களுக்கு பொருத்தமான பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வது குறித்தும் வங்கிகள் ஓய்வு பெற்றவர்களுக்கு வழிகாட்டும்.

 

31/03/2025 வரை ஓய்வு பெறவுள்ள சுமார் 1,200 அதிகாரிகள் இந்த ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை பயிலரங்கு மூலம் மிகவும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

***

IR/RR/KR

 



(Release ID: 2049113) Visitor Counter : 22