அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி வர்த்தகம் குறித்த இருதரப்புக் கூட்டத்திற்கு மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்

Posted On: 25 AUG 2024 12:49PM by PIB Chennai

பிரித்வி பவனில் நடைபெற்ற அமெரிக்க-இந்திய சிவில் அணுசக்தி வர்த்தகம் குறித்த இருதரப்பு கூட்டத்திற்கு மத்திய அறிவியல்-தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்.

ககன்யான் இயக்கத்தின் மூலம் ஒரு இந்திய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைய உள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்தார். இது இந்திய-அமெரிக்க விண்வெளி ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று அவர் கூறினார். உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதில், குறிப்பாக செமிகண்டக்டர்கள், மருந்துகள், தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பின்  முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

 இந்தியாவின் முக்கிய மைல்கல்லாக பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை அமைச்சர் சுட்டிக் காட்டினார். தூய்மையான தொழில்நுட்பங்களில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும், உலகளாவிய பருவநிலை இலக்குகளை அடைவதற்கும் இந்த இயக்கம் முக்கியமானது என்று அவர் எடுத்துரைத்தார். வலுவான கொள்கை கட்டமைப்புகள், சர்வதேச ஒத்துழைப்புகள் மூலம், நீடித்த - நெகிழ்திறன் கொண்ட எரிசக்தி எதிர்காலத்திற்கான மாற்றத்தை வழிநடத்த இந்தியா தயாராக உள்ளது என அவர் கூறினார்.

இந்திய அரசு சர்வதேச ஒத்துழைப்புகளை ஆராய்ந்து வருவதாகவும், ஆராய்ச்சி - மேம்பாட்டில் முதலீடு செய்வதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தில், எரிசக்தி தற்சார்புக்கு பங்களிப்பதிலும், பருவநிலை கடமைகளை நிறைவேற்றுவதிலும் சிறிய - நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.

இந்தியாவின் "அனுசந்தன்" தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (என்ஆர்எஃப்), அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளை (என்எஸ்எஃப்) ஆகியவற்றுக்கு இடையிலான ஒற்றுமைகளை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், அறிவியல் ஆராய்ச்சி - கண்டுபிடிப்புகளை முன்னேற்றுவதில் இரு அமைப்புகளும் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் "பஞ்சாமிர்தம்" பருவநிலை செயல் திட்டத்தை அவர் நினைவு கூர்ந்தார். புதைபடிவம் அல்லாத எரிசக்தி திறனை 500 ஜிகாவாட் ஆக அதிகரிப்பது, கார்பன் உமிழ்வை 1 பில்லியன் டன் குறைப்பது, இறுதியாக 2070 க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் .கே.சூட், இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார்.

புவி அறிவியல் செயலாளர் டாக்டர் ரவி ச் சந்திரன், உயிரித் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலேசி.எஸ்..ஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என்.கலைச்செல்வி இதில் பங்கேற்கனர்.

அமெரிக்கத் தரப்பில் சர்வதேச பருவநிலை கொள்கைக்கான அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகர் ஜான் போடெஸ்டா, அமெரிக்க எரிசக்தித் துறையின் துணை செயலாளர் டேவிட் டர்க் ஆகியோர் தலைமையிலான உயர்மட்ட அமெரிக்க தூதுக்குழு இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், தேசிய பாதுகாப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களில் உலகளாவிய தலைமை ஆகியவற்றில் பரஸ்பர நலன்களுடன், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், கூட்டம் நிறைவடைந்தது.

*****

PLM / KV

 

 



(Release ID: 2048715) Visitor Counter : 26