மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 24 AUG 2024 8:33PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

யுபிஎஸ்- எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

1) உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்: 25 ஆண்டுகள் சேவையில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களுக்கான சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதத்தை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.

2) உறுதியளிக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியதாரர் உயிரிழந்து விட்டால், அவருக்குக், கடைசியாக வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் அவரது குடும்பத்துக்கு வழங்கப்படும்.

3) உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம்: 10 ஆண்டுகள் பணி செய்வதவருக்கு குறைந்த ஓய்வூதியமாக ஓய்வுக்காலத்திற்குப் பிறகு மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

4) பணவீக்கக் குறியீடு: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் மற்றும் உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகியவற்றின் மீது பணவீக்க குறியீடு

சேவைப் பணியாளர்களைப் போலவே தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் அகவிலைப்படி நிவாரணம்

5) பணிக்கொடையுடன், கூடுதலாக ஓய்வு பெறும் போது ஒட்டுமொத்தமாக வழங்கப்படும் தொகை

நிறைவடைந்த ஒவ்வொரு ஆறு மாத சேவைக்கும் ஓய்வு பெறும் நாளன்று மாதாந்திர ஊதியத்தில் 1/10 பங்கு (ஊதியம் + டிஏ)

இந்த பரிவர்த்தணை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தின் அளவைக் குறைக்காது

***********************

PLM/KV
 


(Release ID: 2048714) Visitor Counter : 442