பிரதமர் அலுவலகம்
உக்ரைன் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
23 AUG 2024 6:33PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் திரு விளாடிமிர் ஜெலென்ஸ்கியை, கீவ் நகரில் இன்று (23.08.2024) சந்தித்தார். மரின்ஸ்கி அரண்மனைக்கு வந்த பிரதமரை அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார்.
இரு தலைவர்களும், இருதரப்பு உறவு குறித்தும் விவாதித்தனர், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
இரு தலைவர்களின் முன்னிலையில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இவற்றில் பின்வருவன அடங்கும்:
- வேளாண்மை மற்றும் உணவுத் தொழில் துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்;
- மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான இந்திய மனிதாபிமான மானிய உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்;
(iv) 2024-2028 க்கான கலாச்சார ஒத்துழைப்பு திட்டம்.
***
MM/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2048263)
வருகையாளர் எண்ணிக்கை : 102
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam