பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினர் பகுதிகளில் அரசு திட்டங்களின் பலன் 100% சென்றடைவதை உறுதி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பிரதமரின் ஜன்மன் இயக்கத்திற்கான தகவல், கல்வி மற்றும் தொலைத் தொடர்பு பிரச்சாரம் 23 ஆகஸ்ட் முதல் 10 செப்டம்பர் 2024 வரை நடைபெறவுள்ளது

Posted On: 23 AUG 2024 11:39AM by PIB Chennai

பிரதமரின் ஜன்மன் (பழங்குடியின ஆதிவாசிகள் நீதி மகா திட்டம்) இயக்கம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய பழங்குடியினர் வசிக்கும் 28.7 ஆயிரம் வசிப்பிடங்களில் உள்ள  சுமார் 44.6 லட்சம் தனிநபர்களை (10.7 லட்சம் குடும்பங்கள்) சென்றடையும்; நாடு முழுவதும் உள்ள 194 மாவட்டங்களுக்கு  உட்பட்ட1000 தாலுகாக்களில் அடங்கிய 15,000 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 16,500 கிராமங்களைச் சென்றடையும்.

மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜூவல் வோரம், இணையமைச்சர் திரு துர்கா தாஸ் உய்கி ஆகியோர், பிரதமரின் ஜன்மன் இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ததுடன், தகவல், கல்வி மற்றும் தொடர்பு பிரச்சார இயக்கத்திற்கான ஆயத்த நிலை குறித்தும்  நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கேட்டறிந்தனர். பிரதமரின் ஜன்மன் இயக்கத்தை பழங்குடியினர் கௌரவ தினமான 15.11.2023 அன்று ஜார்கண்டில் குந்தி மாவட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2047979

***

MM/AG/KR



(Release ID: 2048012) Visitor Counter : 49