பிரதமர் அலுவலகம்
வார்சாவில் உள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 AUG 2024 8:12PM by PIB Chennai
வார்சாவில் உள்ள அடையாளம் தெரியாத போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
அடையாளம் தெரியாத வீரர்களின் கல்லறை, நாட்டிற்காக சேவையாற்றும்போது, தங்களது இன்னுயிரை ஈந்த போலந்து வீர்ர்களின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச் சின்னம் ஆகும். பில்சுட்ஸ்கி சதுக்கத்தில் அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னம், போலந்தில், தேசிய நினைவிடம் மற்றும் மரியாதை செலுத்துவதற்கான அடையாளச் சின்னமாகத் திகழ்கிறது.
இங்கு, பிரதமர் மரியாதை செலுத்தியது, இந்தியா – போலந்து இடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட ஆழமான மரியாதை மற்றும் ஒற்றுமையை எடுத்துக் காட்டுகிறது.
Release ID: 2047811
MM/KR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2047952)
வருகையாளர் எண்ணிக்கை : 77
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam