உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சாஹாவுடன் பேசினார் - வெள்ள நிலைமை கேட்டறிந்தார்

प्रविष्टि तिथि: 22 AUG 2024 12:35PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹாவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது மாநிலத்தின் வெள்ள நிலைமை குறித்து அவர் கேட்டறிந்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சாஹாவுடன் பேசினேன். மாநிலத்தின் வெள்ள நிலைமை குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டேன். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவ படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களையும், தேசிய பேரிடர்  மீட்புக் குழுக்களையும் மத்திய அரசு மாநிலத்திற்கு விரைந்து அனுப்பி வருகிறது.  மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும். இந்த நெருக்கடியான நேரத்தில் திரிபுராவில் உள்ள சகோதரிகள் மற்றும் சகோதரர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக நிற்கிறது."

***

PLM/DL


(रिलीज़ आईडी: 2047737) आगंतुक पटल : 90
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Manipuri , Bengali-TR , Assamese , Gujarati , Kannada